இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்தா ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில் இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இலங்கை நாடாளுமன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதன்காரணமாக அங்கு மிகவும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இலங்கையில் இரண்டாவது முறையாக இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரதமர் மஹிந்தாவை பதவி விலக வேண்டுகோள் விடுத்தத்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொருளாதார சூழல் மற்றும் மக்கள் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் மஹிந்தா ராஜபக்ச பதவி விலக அதிபர் கோத்தபய வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. 


எனினும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மஹிந்தா ராஜபக்ச எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவை அவர் வரும் திங்கட்கிழமைக்குள் எடுப்பார் என்று கருதப்படுகிறது. இலங்கையில் அமையும் புதிய ஆட்சி நாட்டின் பொருளாதார சிக்கல்களை சரி செய்யும் என்றால் அதற்கு தாம் உறுதுணையாக இருப்பேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண