ஜானி டெப் தன்னை தாக்கியதாக ஆம்பர் ஹேர்ட் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு…


ஜானி டெப் தன்னை தாக்கியதாக ஆம்பர் ஹேர்ட் கண்ணீர் மல்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்


ஜாக் ஸ்பேரோ:


பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இத்திரைப்படம் பல பாகங்களாக வெளி வந்து வெற்றி பெற்றது. இத்திரைப்ப்டத்தில் கதாநாயகனாக ஜாக் ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப் சிறப்பாக நடித்திருந்தார்.அவரது நடிப்பால் உலகம் முழுக்க ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  


காதல் - விவாகரத்து


அக்வாமேன் திரைப்படத்தில் நடித்த 25 வயதை விட குறைவாக இருந்த ஆம்பர் ஹேர்ட்டும் 50 வயதுக்கும் மேலிருந்த ஜானி டெப்புக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இந்நிலையில் இருவரும், கடந்த  2015 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில காலங்களிலேயே, இருவருக்கிடையேயான காதல் கசக்க ஆரம்பித்து விட்டது.அதையடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.


குற்றச்சாட்டு:


விவாகரத்து பெற்ற சில காலங்களுக்கு பிறகு, ஆம்பர் ஹேர்ட் கட்டுரை எழுத  ஆரம்பித்தார். அக்கட்டுரையில் திருமணமான காலங்களில்  ஜானி டெப் தன்னை மிகவும் துன்புறுத்தியதாக ஆம்பர் ஹேர்ட் கட்டுரையில் குறிப்பிட ஆரம்பித்தார். இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஜானி டெப் மீது மக்களிடையே எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியது. இதனால் ஜானி டெப்புக்க்கு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது.இதையடுத்து ஆம்பர் ஹேர்ட் குறித்தும் ஜானி டெப் குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்தார்.. இதையடுத்து ஆம்பர் ஹேர்ட் தன்னை தாக்கியதாக, அதற்கான அடையாளங்களை ஜானி டெப் வெளியிட்டார். மேலும் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆடியோவை ஜானி டெப் வெளியிட்டார், அதையடுத்து ஜானி டெப் மீது தவறு இல்லை என்று பலரும் கூற ஆரம்பித்தனர்.மேலும் ஆம்பர் ஹேர்ட் தனது செல்வாக்கை கெடுத்து விட்டார் என்று 350 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் பல கட்டங்களாக அமெரிக்க நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.


நீதிமன்றத்தில் கண்ணீர்


 இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஜானி டெப் தன்னை கடுமையாக தாக்கியதாக ஆம்பர் ஹேர்ட் தெரிவித்தார்.அப்போது நீதிபதி முன்பு பேச முடியாது ஆம்பர் ஹேர்ட் கண்ணீர் விட்டார்.இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் யார் மீது தவறு உள்ளது இருவரின் ரசிகர்களும் குழம்பி உள்ளனர். மேலும்  ஜாக் ஸ்பேரோவின் அடுத்த பாகத்தில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று ஜானி டெப் கூறியதால் , அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.