இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், தொலைக்காட்சியின் நேரலையில் பேச ஆரம்பித்தனர்.


அப்போது, நேரலையில் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர், இனி ரூபவாஹினி தொலைக்காட்சி நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.




தொடரும் போராட்டம்:


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் ராஜபக்‌ச குடும்பத்தினர்தான் என்று கூறி, இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக ராஜபக்‌ச குடும்பத்தினர் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.


இந்நிலையில் மாலத்தீவில் கோட்டபய ராஜபக்ச இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் பதவியிலுள்ள ரணில் விக்ரம சிங்கவும் பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


சமூக வலைதளங்களில் வைரல்:


போராட்டக்காரர்களில் சிலர், இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் தொலைக்காட்சியின் நேரலையில் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண