அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இன பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தற்போது மெக்சிகோவில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவரை சக மாணவர்கள் இன பாகுபாடு காரணமாக தீ வைத்துள்ள செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மெக்சிகோ நாட்டின் குரேடாரோ பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஜூயன் ஸமோரானோ என்ற 14 வயது சிறுவன் பயின்று வந்துள்ளார். இவருக்கு அந்தப் பள்ளியில் படித்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன பாகுபாடு தொடர்பாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளியில் ஜூயன் ஸமோரானோவிற்கு வகுப்பறையில் சக மாணவர்கள் இருவர் இவர் உட்காரும் இடத்தில் மது பானத்தை ஊற்றியுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அவருடைய உடையில் மது பான பட்ட பிறகு அதில் தீ பற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 




இந்த தீ விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த வாரம் சிகிச்சை குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி மெக்சிகோவின் பழங்குடியின ஒடாமி வகுப்பைச் சேர்ந்தவர் ஜூயன் ஸமோரானோ. 


இதன்காரணமாக அவரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இன பாகுபாடு தொடர்பாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அத்துடன் இவர் தன்னுடைய ஒடாமி மொழியில் பேசினால் அவரை கேலி செய்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது ஜூயன் ஸமோரானோ மீது தீ வைக்கும் அளவிற்கு இந்த இன பாகுபாடு சம்பவம் வளர்ந்துள்ளது. 


மெக்சிகோ நாட்டின் பழங்குடியின பிரிவுகளில் ஒன்று ஒடாமி. இந்தப் பிரிவைச் சேர்ந்த சுமார் 3,50,000 மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக அங்கு இன பாகுபாடு தொடர்பான பிரச்னையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மெக்சிகோ நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 40 சதவிகித பழங்குடியின மக்கள் இன பாகுபாடு தொடர்பான பிரச்னையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒடாமி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை விடுதி உரிமையாளர் கழிவறை பயன்படுத்த விடாமல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது மீண்டும் அங்கு இனவெறி பிரச்னை வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண