கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வரும் காலகட்டத்திலும் அதை பொறுப்படுத்தாமல் புதிய முறையில் வகுப்புகளை நடத்தி வருகின்றது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளி. உலக அளவில் ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா பரவல் மிகவும் அதிகமாகவுள்ளது. குறிப்பாக இந்தியாவை போல ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் மோசமான முறையில் பரவி வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் டி லா என்ற பள்ளி தங்கள் மாணவர்களுக்கு கடற்கரையில் கல்வி கற்பித்து வருகின்றது. 




 


கடந்த ஓராண்டாக மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே நேரத்தை கழித்துவரும் நிலையில் கடற்கரையில் சமூக இடைவெளியுடன் கல்வி கற்பது அவர்கள் மனதிற்கு மிகவும் இதமான சூழலை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இணைய வழியில் கல்வி கற்பதை காட்டிலும் இதுபோன்ற இயற்கைசூழலில் அவர்கள் கல்வி கற்பது, அவர்களின் பாடம் கற்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.  இதனால் இணைய வழியில் பாடம் நடத்தாமல் 6 முதல் 12 வயதுள்ள மாணவர்களுக்கு இந்த வகை கல்வி கற்பித்தலில் ஈடுப்பட்டுள்ளது பெலிக்ஸ் பள்ளி.