ஒரு நகரம் அல்லது ஒரு இடம் காணாமல் போனது என்றால் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வருவது நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் அத்திப்பட்டு என்ற கிராமம் ஒன்று கடலில் மூழ்கி காணாமல் போனதாக கூறப்படும். அந்த மாதிரி உலகத்தின் ஒரு பகுதியில் தண்ணீரில் மூழ்கிய கிராமம் ஒன்று தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது எங்கே? எப்போது மூழ்கியது?


ஸ்பெயின் நாட்டின் லொபிஸ் பகுதிக்கு அருகே அக்ரிடோ என்ற கிராமம் இருந்துள்ளது. இந்த கிராமம் லிமியா என்ற நதிக்கு அருகே அமைந்துள்ளது. அந்த நதியில் போர்ச்சுகல் ஒரு அணையை கட்டுள்ளது. அந்த அணையின் கதவுகளை 1992ஆம் ஆண்டு போர்ச்சுகள் மூடியுள்ளது. இதனால் நதியில் நீர் வெள்ளம் போல் இந்த கிராமத்திற்கு புகுந்துள்ளது. இதன் காரணமாக இந்த கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அங்கு இருந்த 12க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த இடத்தை காலி செய்துள்ளனர். 



இச்சம்பவம் நடைபெற்று தற்போது கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அங்கு தண்ணீர் வற்றியுள்ளதால் அந்த கிராமம் நமக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த இடம் தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் நீண்ட நாட்களாக தண்ணீருக்குள் மூழ்கி மோசமாக இடந்து விழுந்துள்ள கட்டடங்கள் உள்ளிட்டவை தெரிகின்றன. 


மேலும் அந்த இடம் முழுவதும் பாசி படிந்துள்ள இடம் போல் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக ஒரு சில பொருட்கள் அப்படியே அங்கு இருப்பது நமக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. குறிப்பாக ஒரு மேசை மற்றும் அதில் இருக்கும் பாட்டீல்கள் நம்மை மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. மேலும் இந்த வீடியோவை பலரும் வியந்து பார்த்து இதை பகிர்ந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் வந்த சிட்டிசன் படத்தை போல் ஒரு கிராமம் முதலில் வெள்ளத்தில் காணாமல் போகியுள்ளது. அதன்பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கிராமத்தின் தடையங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: இந்தியா-ரஷ்யா இடையே 2+2 சந்திப்பு - ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை !