வித்தியாசமான உணவுகள், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது போன்ற அழகான நினைவுகளை சேர்க்கும் ஒரு இடம்தான் உணவகங்கள். ஊருக்கு ஊர் விதவிதமான எத்தனையோ உணவகங்கள் உள்ளன. ஆனால் இங்கு ஒரு உணவகம் அநியாயத்துக்கு வித்தியாசமாக உள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் இந்த உணவகத்தின் ஸ்பெஷலே நிர்வாணம்தான்.
ஸ்பெயின் நாட்டில் உள்ளது ‘Innato Tenerife’. இந்த ஹோட்டலுக்கு சென்று உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை நிர்வாணமாக பரிமாறுவார்கள். நிர்வாணமாக பரிமாறுவது என்றால் கையில் எடுத்துக்கொண்டு டேபிளுக்கு வர மாட்டார்கள். நிர்வாணமாக படுத்திருக்கும் அவர்கள் மீது உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும். ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் நேராக சென்று நிர்வாண உடல் மீது வைத்திருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பாலியல் குற்றச்சாட்டு சொன்ன இளம்பெண்... 100 சவுக்கடி 7 ஆண்டு சிறை தண்டனை..! காரணம் என்ன?
அதேபோல சாப்பிட வரும் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக அமர்ந்தே உணவு சாப்பிடலாம். நிர்வாணம் என்றாலும் தனி அறைதான் வழங்கப்படும். அங்கு சென்று நிர்வாணமாக உணவு உண்டு மகிழலாம். தம்பதிகள் நேரத்தை அழகாக செலவிடும் விதமாக கேண்டில் லைட் டேபிளும் அங்கு இருக்கிறதாம். ஏன் இந்த நிர்வாணம் எனக் கேட்டார் இதனை‘Orgasmic Atmosphere’ என்று கூறுகின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். ஆனால் ஒரு கண்டிஷன் உண்டு.
கத்தாரில் கைதான ஹைதராபாத் நபர் வைத்திருந்தது போதைப் பொருளா? பாண்ட்ஸ் பவுடரா?
ஹோட்டலுக்குள் செல்லும் போது செல்போனை கையில் எடுத்துச்செல்லக் கூடாது. செல்போனுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. நிர்வாண ஓட்டல் என்பதால் புகைப்படங்கள் எடுத்துவிட வாய்ப்புள்ளதாக இந்த ரூலை ஹோட்டல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் ஹோட்டல் எப்படி இருக்கும், உள்ளே உணவுகள் எப்படி பரிமாறப்படும் போன்ற போட்டோக்களை ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
அரிய வகை குரங்குகளின் இனப்பெருக்கத்துக்கு, இங்கிலாந்து பூங்கா செய்த நூதன முயற்சி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்