கால்பந்து உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகளில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 28 வயது பயோலா சிச்சிடிகெட் என்ற பெண்ணும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு அங்குப் பணியில் இருக்கும் போது பாலியல் ரீதியிலான தொந்தரவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பயோலா புகார் தெரிவித்துள்ளார். அதில்,அவர் அங்கு வசித்து பணி செய்து கொண்டிருக்கும் போது அவருடைய வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். மேலும் அவருடைய உடலில் அந்த நபர் தாக்கிய காயங்களையும் காவல்துறையிடம் காட்டியுள்ளார்.
இருப்பினும் இந்தப் புகாருக்கு பிறகு அந்நாட்டு காவல்துறையினர் பயோலா மீது புகார் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பயோலா அந்த நாட்டில் பணிப்புரிந்த போது திருமணத்தை மீறிய பந்தத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் பயோலா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பயோலா மீதான குற்றம் உறுதியாகும் பட்சத்தில் 100 சவுக்கடி மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க அந்தப் பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இந்த குற்றத்தில் வரும் மார்ச் 7ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் புகார் கொடுத்த பெண் மீதே தற்போது குற்றச்சாட்டை திருப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் பாதி வரை கத்தாரில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரை பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கண்ணுக்குள்ள ஏதோ நகருது! பெண் உடலுக்குள் உயிருடன் ஊடுறுவிய 3 ஒட்டுண்ணி! அதிர்ச்சி சம்பவம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்