SpaceX Starship Explodes: நடுவானில் வெடித்துச்சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. விண்ணில் தோன்றிய தீப்பிழம்புகளின் வீடியோ...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட ராக்கெட்டான ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், மேல் நிலை திடீரென வெடித்துச் சிதறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியாக, ஸ்டார்ஷிப் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பை தயாரித்து சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது முறையாக ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் மேல் நிலை திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே முதல் முறையாக கடந்த 2023-ம் ஆண்டு இந்த ராக்கெட் சோதனை செய்யப்பட்டபோது, விண்ணில் அது வெடித்துச் சிதறி தோல்வியடைந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாவது முறையாக பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட் விண்ணில் பாய்ந்து மேல் நிலையை விண்ணில் நிலைநிறுத்தி, பூஸ்டர் பூமிக்கு திரும்பி, அது வெற்றிகரமாக பிடிக்கப்பட்ட நிலையில், மேல் நிலையானது திடீரென வெடித்துச் சிதறி விண்ணில் தீப்பிழம்பாய் காட்சியளித்தது. இதை பலரும் படம்பிடித்து, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
Just In




இது குறித்து பதிவிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ராக்கெட் ஏவப்பட்டபோது, எதிர்பாராத விதமாக திட்டமிடப்படாத பிரித்தெடுத்தல் நிகழ்ந்ததால், மேல் நிலை வெடித்துச் சிதறியதாக குறிப்பிட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்புகொண்டு, ஏற்கனவே திட்டமிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தோல்வி குறித்த மற்றொரு பதிவில், இதுபோன்ற சோதனைகளின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களே வெற்றியை கொடுக்கும் என்றும், இந்த நிகழ்வு, பிரச்னைகளை சரி செய்து, ஸ்டார்ஷிப்பின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க எங்களுக்கு உதவும் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அதன் மூலம் தவறுகளை சரி செய்து, அடுத்த ஸ்டார்ஷிப் சோதனையை மேம்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.