ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களின் மற்றொரு பெரிய தொகுதியை ஜூலை 7 ஆம் தேதி விண்ணில் ஏவியது.  சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கீழ் நிலை, ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமிக்கு மீண்டும் வந்தடைந்தது. 






கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் இருந்து ஜூலை 7 ஆம் தேதி பிற்பகல் 3:29 மணிக்கு 48 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை சுமந்து பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில், ராக்கெட்டின் முதல் நிலை மீண்டும் பொறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு, ஏறக்குறைய எட்டு நிமிடங்கள் 50 வினாடிகளுக்குப் பிறகு நிகழ்ந்தது. இந்த செயற்கைக்கோள் தொகுதிகள் மூலம், இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பால்கன் 9 ராக்கெட் இதுவரை 12 முறை ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






ஸ்பேஸ்எக்ஸ் 4,700-க்கும் மேற்பட்ட ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று வானியல் இயற்பியலாளரும் செயற்கைக்கோள் கண்காணிப்பாளருமான ஜொனாதன் மெக்டோவல் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்காலத்தில் இன்னும் பல ஸ்டார்லிங்க் தொகுதிகள் அனுப்பப்படும் என்றும், சுமார் 12,000 இணைய செயற்கைக்கோள்களை LEO  (low earth orbit) இல் நிலைநிறுத்துவதற்கு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 30,000 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  


சில நிபுணர்களின் கூற்றுப்படி, வளர்ந்து வரும் நெட்வொர்க் நீண்ட காலத்திற்கு விண்வெளி நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சமீபத்தில் ஆறு மாத கால இடைவெளியில் 25,000 மோதல் - தவிர்ப்பு (collision-avoidance maneuvers) சூழ்ச்சிகளைச் செய்துள்ளது, மேலும் அதிகப்படியான செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையை அடையும் போது அந்த எண்ணிக்கை உயரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.               


Tamilnadu Fishermen: தமிழகமே அதிர்ச்சி..! ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்


24 மணிநேரத்தில் 2,200 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - எரிமலை வெடிக்கும் என எச்சரிக்கை


James Webb Space Telescope: பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கருந்துளை.. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பில் புதிய சாதனை..