பெண்களை கொச்சைப்படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பால் நிறுவனம் ஒன்று உலக அளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு தனிமனிதரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 


பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம்  சியோல் மில்க் (Seoul Milk). இந்த நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரம் உலக அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. மேலும், மனிப்பும் கோரியுள்ளது. 


இதுகுறித்த விளம்பரத்தில் இயற்கையான காட்சிகளை படம்பிடிக்க ஒரு அழகிய காட்டிற்குள் இளைஞர் ஒருவர் கேமராவுடன் வருகிறார். அப்போது அங்கு நீரோடையில் தெளிந்த நீர் ஓடுகிறது. அதை படம் எடுக்கிறார். அப்போது அங்கு ஒரு இளம்பெண்கள் பலர் வெள்ளை நிற உடையில் தேவைதைகள் போன்று தோன்றி நீரை அருந்துகின்றனர். மர இலையில் இருந்த நீரையும் சிலர் ருசிக்கின்றனர். அதையும் காட்சியாக்குகிறார் அந்த இளைஞர். தொடர்ந்து காட்டிற்குள் சென்றால் புல்வெளி படர்ந்த சமவெளியில் இளம்பெண்கள் பலர் யோகா செய்துகொண்டு இருக்கின்றனர். அதையும் படமாக்குகிறார். அப்போது திடீரென அனைத்து பெண்களும் ஜெர்ஸி பசு மாடுகளாக காட்சி அளிக்கின்றன. 


 






இறுதியில், ‘சுத்தமான நீர், இயற்கையான உணவு, 100 சதவிதிம் தூய்மையான பால்’ என முடிகிறது. இந்த விளம்பரம் வெளியான சில நாட்களிலேயே கடும் சர்ச்சை கிளம்பியது. பலரும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் விளம்பரத்தை திரும்ப பெறுவதாக சியோல் மில்க் நிறுவனம் அறிவித்தது. 


அதிகாரப்பூர்வ யூடியூப்பில் இருந்து விளம்பரம் நீக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான விளம்பரத்திற்கு ஒவ்வொரு நபரிடமும் மன்னிப்பு கோருகிறோம், இனியும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பால் நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!


 


‛போலீஸ் படமாக எடுக்க நினைக்கவில்லை... ஆனால் அது அமைந்துவிட்டது’ -வலிமை பற்றி ஹெச். வினோத் சிறப்பு பேட்டி!