செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட தி ராஸ்காஸ்மோஸ் எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர், (The Roscosmos ExoMars Trace Gas Orbiter) அங்கு பூமியில் உள்ள பெரும் பள்ளத்தாக்கைவிட பெரிய பள்ளத்தாக்கு இருப்பதையும் அதில் மறைநீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டறிந்துள்ளது.


The Roscosmos ExoMars Trace Gas Orbiter என்பது ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கூட்டாக அனுப்பிய விண்களம் மேற்கொண்டுள்ள ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. Fine Resolution Epithermal Neutron Detector (FREND) என்ற கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் மறைநீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்தக் கருவியானது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறியும். இதற்கு முன்னர் அனுப்பிய இயந்திரங்களால் நீரைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் இப்போதுள்ள கருவி தண்ணீரைக் கண்டறிந்துள்ளது.


இது குறித்து எக்ஸோமார்ஸ் ஆர்பிட்டர் சார்பில் பதிவிடப்பட்டுள்ள ட்வீட்டில், பிரேக்கிங் நியூஸ்: நான் தண்ணீரைக் கண்டுபிடித்துள்ளேன். அது பனிக்கட்டியாக இருக்கலாம். தண்ணீரை உள்ளடக்கிய தாதுக்களாக இருக்கலாம். அங்கிருந்த பள்ளத்தாக்கு பெரியது. மிகமிகப் பெரியது. இனி எதிர்காலத்தில் வரும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






டிஜிஓ என்ற இந்த வகை கருவியின் மூலம் செவ்வாயின் தூசி மிகு மேற்பரப்பில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு துளையிட முடியும். அதன் மூலம் நீர் நிலைகளைக் கண்டறிய முடியும். அந்த வகையில்  தி ராஸ்காஸ்மோஸ் எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர், (The Roscosmos ExoMars Trace Gas Orbiter) டிஜிஓ கருவி, வேலஸ் மரைனரிஸ் என்ற பெரும் பள்ளத்தாக்கில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதன் மேல்பரப்பில் சுமார் 40% தண்ணீரை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தப் பகுதியின் பரப்பளவு நெதர்லாந்து நாட்டின் அளவை ஒத்ததாக உள்ளது.


இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் எனக் கருதப்படுகிறது.