தென் கொரியாவைச் சேர்ந்த காஸ் என்னும் பீர் நிறுவனத்தின் பீர் பாட்டில்கள் ஏற்றிய டிரக் முன்னதாக விபத்துக்குள்ளான நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


’முன்வந்த தன்னார்வலர்களுக்கு நன்றி’


இந்நிலையில், பீர் பாட்டில்கள் அடங்கிய டிரக் விபத்துக்குள்ளான பிறகு சாலையில் சிதறிக் கிடந்த பாட்டில்கள், பீர் ஆகியவற்றை சுத்தம் செய்து உதவிய மக்களுக்கு இந்நிறுவனம் தற்போது நன்றி தெரிவித்துள்ளது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கடந்த ஜூன் 29ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், அவ்வழியே சென்றோரில் தாமாக முன் வந்து பலர் சாலையை சுத்தம் செய்து உதவியுள்ளனர்.


 






அதிகாரப்பூர்வ பக்கத்தில் நன்றி


இந்தக் காட்சிகள் அப்படியே அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், முன்னதாக இக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.


இந்நிலையில், காஸ் பீர் நிறுவனம் முன்னதாக தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இக்காட்சியைப் பகிர்ந்து சாலையை சுத்தம் செய்து உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பீர் நிறுவனத்தின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




மேலும் படிக்க:2வது மனைவியின் மகளுக்கு குழந்தை கொடுத்தேன்; குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை: எலான் மஸ்க்கின் தந்தை பேட்டி!


Shinzo Abe Japan PM : 'பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர்' ஷின்சோ அபேயின் வாழ்வும் வரலாறும்..!


Sri Lanka Security : இலங்கையில் மீண்டும் வீரியமாகும் போராட்டங்கள்.. திடீரென அதிகரிக்கப்பட்ட இலங்கை அதிபரின் பாதுகாப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண