SriLanka Issue; மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த தடை இம்மாத 28ம் தேதி வரை எனவும் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இம்மாதம், அதாவது ஜூலை 28ம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்டுவதாக இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி உயர்வு, வேலையின்மை என மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் ஆளும் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போரட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால் அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை என அனைத்தும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை கைப்பற்றியபோது, அதிபர் கோட்டபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் தொடர்ந்து போராட்டங்கள் நிழந்தவாறே இருந்தது. இதனால், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயர், அதிபர் கோட்டபய ராஜபக்சே புதன் கிழமை நாட்டிற்கு திரும்ப வருவார் என தெரிவித்திருந்தார். அவர் அப்போது தனது பதவி ராஜினாமா குறித்து அறிவிப்பார் எனவும் எதிர் பார்க்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மத்தியில் தொடர்ந்து கிளர்ச்சி இருந்துவந்தது. இதனால், இலங்கைக்கு மீண்டும் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இலங்கை வருவதை தவிர்த்தார் கோட்டபய ராஜபக்சே. இலங்கையில் இருந்து தப்பி மலத்தீவில் தங்கியிருந்தார் கோட்டப ராஜபக்சே. பிறகு அங்கிருந்து நேற்று சிங்கப்பூருக்கு தப்பியோடினார். இந்நிலையில், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோட வாய்ப்பு இருப்பதாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை இன்று விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையினை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடை இம்மாதம், அதாவது ஜூலை 28ம் தேதி வரை தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்