Solar Eclipse 2022 :


சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ்வு தொடங்கியது. இந்தியாவின் சில பகுதிகளில் இதைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.


தமிழ்நாட்டில் இந்நிகழ்வு மாலை 5.15 முதல் 5.45 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.



சூரிய கிரணம்:


பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை (சுமார் 5 டிகிரி சாய்கோணத்தில் சுற்றிவரும்). எனவே ஒவ்வொரு சுற்றின் போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும் சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது மட்டும் சூரிய கிரகணம் நிகழ்கிறது.


புது டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புவனேஷ்வர், ஹரியானா, குருஷேத்ரா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட தொடங்கியது.






புது டெல்லி - மாலை 04:28 முதல் 05:42 வரை
மும்பை -  மாலை 04:49 முதல் 06:09 வரை
கொல்கத்தா- மாலை 04:51 முதல் 05:04 வரை
சென்னை- மாலை 05:13 முதல் 05:45 PM வரை
பெங்களூர்- மாலை 05:12 முதல் 05:56 வரை


 






புனே - மாலை 04:51 முதல்  06:06 வரை
அகமதாபாத்- மாலை 04:38 முதல் 06:06 வரை
ஜெய்பூர் - மாலை 04:31 முதல் 05:50 வரை
லக்னோ - மாலை 04:36 முதல் 05:29 வரை







உஜ்ஜெயின் - மாலை 04:40 முதல் 05:53 வரை
பாட்னா- மாலை 04:42 முதல் 05:14 வரை
வாரணாசி- மாலை 04:51 முதல் 05:22 வரை







ஐதராபாத்- மாலை 04:58 முதல் 05:48 வரை


ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசிய பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது. உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடியும்.


இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகர்களில் இந்த நிகழ்வைக் காண இயலும். தமிழகத்தில் 5 சதவீத வரை சூரிய கிரகணம் தென்பட்டது. அடுத்த பகுதியளவு சூரிய கிரகணம் 2027-ல் ஆக்ஸ்ட்,2 ஆம் தேதி நிகழ உள்ளது.