WhatsApp: உலகம் முழுவதும் சுமார் 2 மணி நேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ, போட்டோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குழுக்களாக ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் சேவை தீடீரென இன்று மதியம் முடங்கியதால் வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை பகிர முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வந்தனர். வாட்ஸ்ஆப் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வந்தனர். அதாவது இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வாட்ஸ் ஆப் செயலி தீடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் சுமார் 2 மணி நேரமாக தவித்து வந்தனர். மேலும் இதுகுறித்தும் ட்விட்டரில் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை டேக் செய்து பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். #WhatsappDown என்ற ஹேஷ்டேக்கை குறியிட்டு பல பயனர்கள் தங்கள் மொபைல்போனில் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை, டெல்லி, மும்பை, லக்னோ, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது. மெட்டா நிறுவனம் தரப்பில் கூறியதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் இது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் ஆப் சேவை சீரானது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை சீரானது.
வாட்ஸ் ஆப் இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கு அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.