ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் அண்மையில், நல்ல மற்றும் எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியை தூங்கியே கண்டுபிடித்ததாகச் சொல்கிறார். ஜேக்கி போஹம் என்னும் அந்த இன்ப்ளுயன்சர் ஒரு மாதத்திற்கு 28,000 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ. 26 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் செய்வதெல்லாம் ஒன்றுதான், மக்கள் விரும்பும் வழியில் அவரை எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்.


அவர் தூங்குகிறார், அவரை எழுப்ப மக்களைச் சேர்க்கிறார். அவர்கள் அவருக்கு பணம் செலுத்துகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் தனது அலாரங்களிலிருந்து பணம் சம்பாதிக்கிறார் .






போஹம் சில கூடுதல் ரூபாய்களை சம்பாதிக்க இந்தத் தனித்துவமான யோசனையை கொண்டு வந்த பிறகு, அவர் தனது படுக்கையறையை லேசர்கள், ஸ்பீக்கர்கள், ஒரு குமிழி இயந்திரம் மற்றும்  தூக்கத்தை தொந்தரவு செய்யக்கூடிய ஏராளமான பொருட்களைக் கொண்டு தயார் செய்தார். வீடியோ லைவ் ரிலே செய்யும் நேரடி ஸ்ட்ரீம் மூலம் பார்வையாளர்கள் போஹமின் படுக்கையறையில் உள்ள சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம்.இதன் செயல்முறை மிகவும் எளிது. போஹம் அவரைப் பின்தொடர்பவர்கள் சிலரைப் பணத்திற்கு ஈடாக அவரை எழுப்ப ஊக்குவிக்கிறார். பின்தொடர்பவர்கள் அலாரத்திற்காக எந்தப் பாடலையும் தேர்வு செய்யலாம் மற்றும் எரிச்சலூட்டும் ஒளிக் காட்சி அல்லது பிற விஷயங்களுடன் அதை இணைக்கலாம்.


ஜேக்கி போஹமின் டிக்டாக் தளம்,5.2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. நம்பினாலும் நம்பாவிட்டாலும், அவர்களில் பலர் ஒவ்வொரு நாளும் அவரை எழுப்புவதற்கு அவருக்கு நல்ல தொகையை செலுத்துகிறார்கள். 


இந்த ஐடியாவில் இருக்கும் ஒரே சிக்கல் அடிக்கடி எழுப்பப்படுவதால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டு அது ஒரு பெரும் உடல்நலப் பிரச்னையாக மாறக்கூடும் வாய்ப்புகள் உள்ளன.