ஸ்னிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்துள்ள புதிய பொருள் ஒன்றின் விளம்பரத்தில் தைவான் ஒரு நாடு என குறிப்பிடப்பட்டிருந்ததாக சீன சமூக வலைதளவாசிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஸ்னிக்கர்ஸ் கேண்டி பாரின் தயாரிப்பாளரான மார்ஸ் ரிக்லி, அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.


நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட விளம்பர புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் குறிப்பிட்ட அந்த ஸ்னிக்கர்ஸ் பார், லிமிடெட் எடிஷன் என்றும் தென் கொரியா, மலேசியா மற்றும் தைவான் ஆகிய "நாடுகளில்" மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சீன சமூக வலைதளமான வெய்போவில் வெள்ளிக்கிழமை வைரலானது.


 






வெய்போவில் உள்ள ஸ்னிக்கர்ஸ் கணக்கில் மார்ஸ் ரிக்லி, மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட விளம்பரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தைவானை தனது ஓர் அங்கமாக சீனா கருதி வரும் நிலையில், தைவானோ, தனி அரசாங்கத்துடன் இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்தார். தைவானுக்கு அமெரிக்க அரசில் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரிதிநிதி வந்தது சீனாவின் கோபத்தை தூண்டியது.


அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி தரும் வகையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி தைவானுக்கு சென்றது இதுவே முதல்முறை. 


இதற்கு பதிலடியாக, உலகின் பரபரப்பான கடல்வழி பாதையிலும் தைவான் கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள பகுதிகளிலும் சீனா தொடர்ச்சியான போர் பயிற்சிகளைத் தொடங்கியது.


தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை வியாழன் அன்று தொடங்கியது. அதுமட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தைவானுக்கு அருகே நிறுத்தியுள்ளது.


சீனாவின் போர் பயிற்சி குறித்து தெரிவித்துள்ள தைவான், "11 டோங்ஃபெங்-வகுப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா பல தொகுதிகளாக தாக்கியுள்ளது. பிராந்திய அமைதியை கெடுக்கும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண