பார்வையற்ற பல்கேரிய மூதாட்டி பாபா வங்கா, எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர். இவர் கணித்த செப்டம்பர்/11 பயங்கரவாதத் தாக்குதல்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஆகியவை அப்படியே நடந்துள்ளது. அதேபோல், அவர் முன்கூட்டியே கணித்திருந்த சோவியத் யூனியன் சீர்குலைவு, இளவரசி டயானா மரணம், 2004 ல் சுனாமி, அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பு ஆகியவையும் உண்மையாகியுள்ளது.
பாபா வாங்காவின் உண்மையான பெயர் வாங்கெலியா குஷ்டெரோவா என்றும், இவர் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகும் என்பதால் இவருக்கு 'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று செல்லப்பெயர் வந்தது. 1911 ஆம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, தனது 12வது வயதில் ஒரு பெரிய புயலின் போது மர்மமான முறையில் பார்வையை இழந்ததால், எதிர்காலத்தைப் பார்ப்பதற்காக கடவுளிடமிருந்து தனக்கு மிகவும் அரிதான பரிசு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
கடந்த 1996 ம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி தனது 84 வது வயதில் பாபா வங்கா இறந்தபோதும், அவர் 5079 ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அதுவரை ஒவ்வொரு ஆண்டும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கணித்தும் சென்றுள்ளார்.
பாபா வங்கா 2022 கணிப்புகள் :
இயற்கை பேரழிவுகள் :
2022 ஆம் ஆண்டில், பல ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா "உக்கிரமான வெள்ளத்தால்" பாதிக்கப்படும்
ஒரு புதிய கொடிய வைரஸ் :
வரவிருக்கும் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையும் என்றும், சைபீரியா நாட்டில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிக்கும்
குடிநீர் நெருக்கடி :
வரவிருக்கும் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள பல நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும்
வெட்டுக்கிளி தாக்குதல் :
விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழித்து பஞ்சம் தலைவிரித்தாடும்
கணினி பயன்பாடு :
2022ம் ஆண்டு அதிகளவில் கணினி பயன்பாடுகளை சார்ந்ததாக இருக்கும் என்றும் உலக மக்கள் முன்பை காட்டிலும் அதிக நேரத்தை திரைகளின் முன் செலவிடுவார்கள்
ஏலியன் தாக்குதல் :
ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வாழ்வதற்கான வழிகளை தேடி, 'ஒமுஅமுவா' (oumuaumu) என்ற சிறிய கோளை அனுப்புவார்கள் என்றும் கணித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்