நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் கடற்படை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அகதிகளாக வெளியேற்றம்:


இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கனடா நாட்டுக்கு அகதிகளாக சென்ற, இலங்கை தமிழரின் கப்பலானது, வியாட்நாம் மற்றும் பிலிப்பைன் இடையேயான கடற்பகுதிக்குள் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. 


பின்னர் நடுக்கடலில் தத்தளித்த, குழந்தைகள் உட்பட 306 பேரை சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இச்சம்பவம் குறித்து, இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களுக்காக, இலங்கையிலிருந்து மக்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.


நடுக்கடலில் தத்தளித்த 306 பேர்:


இந்நிலையில், 306 பேர் கொண்ட கப்பலானது, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், அவர்கள் சென்று கொண்டிருந்த கப்பலானது பழுதாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.




இந்நிலையில், இந்த விவகாரம் அறிந்த கொண்டதையடுத்து, இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களை பாதுகாக்கும் வகையில், அண்டை நாடுகளுடன் தொடர்பு கொண்டோம்.


பின்னர் சிங்கப்பூர் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூர் கடற்படை இலங்கை மக்களை மீட்டு, அருகிலுள்ள நாடான வியட்நாம் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


தொடர் கதை:


இலங்கையில் போர் நிகழ்ந்த காலங்களில், மக்கள் பலர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். இலங்கை மக்கள், இந்தியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். 


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதையடுத்து, இலங்கை மக்கள், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்று பதவி விலகினார். 


இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டார். இந்நிலையில்,விலைவாசி சற்று குறைக்கப்பட்டாலும், இன்னும் அதிக அளவிலே நீடித்து வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், இலங்கை மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!