ட்விட்டர் ப்ளூ டிக்குக்கு கட்டணம்.. மஸ்குக்கு முட்டு கொடுக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்! யார் இவர்?

ட்விட்டரில் ப்ளூ டிக்குக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கும் எலான் மஸ்கின் திட்டத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் அவருக்கு தற்போது உதவியாக இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

Continues below advertisement

ட்விட்டரில் ப்ளூ டிக்குக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கும் எலான் மஸ்கின் திட்டத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் அவருக்கு தற்போது உதவியாக இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

Continues below advertisement

முன்னதாக "பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்" என்று ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், இப்போது எல்லா சமூக வலைதளங்களும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் யாரைப் போலவும் ஆள்மாறாட்டம் செய்ய முடியும். அதனால் நாம் தான் என்ற உறுதிப்படுத்துதல் அவசியம். சில நேரங்களில் ப்ளூ டிக் கணக்குகள் கூட ஹேக் ஆன சம்பவங்களும் உண்டு. ஆனால் அதற்கு மாதக் கட்டணமாக 8 டாலர் கொடுத்துப் பாருங்கள். இது போன்ற சைபர் தாக்குதல்கள் இல்லாமல் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

எலான் மஸ்க் ட்விட்டரில் உயர்மட்ட அளவிலான மாற்றங்களைச் செய்துவரும் நிலையில், ​​அவர் தன்னைச் சுற்றி ஆலோசகர்களைப் புதுப்பித்து வருகிறார். இவர்களில் வென்ச்சுர் கேப்பிட்டலிஸ்ட் டேவிட் சாக்ஸ் மற்றும் சில நெருங்கிய வணிக கூட்டாளர்களுடன், இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன்(Sriram Krishnan) என்பவரும் இணைந்துள்ளார். 

முன்பு ட்விட்டரில் பணிபுரிந்த கிருஷ்ணன், A16z என்றும் அழைக்கப்படும் சிலிக்கான் வேலி முதலீட்டு நிறுவனமான அண்ட்ரீசன் ஹோரோவிட்ஸில் பங்குதாரராக உள்ளார், இந்த நிறுவனம் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் முதலீடு செய்தது.

தி நியூயார்க் டைம்ஸின் செய்தியின்படி, கிருஷ்ணனும் மற்ற ஆலோசகர்களும் அக்டோபர் 30 அதாவது எலான் ட்விட்டரை வாங்குவதற்கு முதல் நாள் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் எவ்வித இடர்பாடுகளும் நேராமல் பார்த்துக்கொண்டதாகவும். அதே நேரத்தில் மஸ்க் நியூயார்க்கிற்கு 31 அக்டோபர் அன்று விரைந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கிருஷ்ணன் அலுவலகத்தின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டார், மேலும் அவர் தற்காலிகமாக மஸ்குக்கு உதவி செய்வதாக கூறினார்.

கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருவரும் சென்னையில் பிறந்து நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள். 2003ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்கும் போது, ​​கல்லூரியில் இருவரும் சந்தித்துள்ளனர். இருவரும் தற்போது சான் பிரான்ஸிஸ்கோவின் நோயே பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். தம்பதி இருவருக்கும் 2 வயது மகள் உள்ளார். தற்போது சியாட்டலில் உள்ள பாலோ அல்டோவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். 

ஸ்ரீராம் கிருஷ்ணன் ட்விட்டர் தவிர, யாஹூ, ஃபேஸ்புக் மற்றும் ஸ்நாப் ஆகியவற்றில் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமூக ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில் முக்கிய முதலீட்டாளரான அண்ட்ரீசன் ஹோரோவிட்சில் 2021-ஆம் ஆண்டில் அவர் இணைந்தார். அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி நெட்ப்ளிக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் பணிபுரிந்துள்ளார். மேலும் ட்ரூ அண்ட் கோ மற்றும் லூமாய்ட் போன்ற ஸ்டார்ட் அப்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola