உலகெங்கிலும் உள்ள இண்டர்நெட் பயன்படுத்தும் மக்களிடம் ’சீம்ஸ்’ பற்றி கேட்டால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எதில் எடுத்தாலும் சீம்ஸ் என்னும் நாயின் முகத்தில் ஒரு மீம்ஸாவது பார்த்து சிரித்து விடுவீர்கள்.
அதிலும், குறிப்பாக ‘என்ன குழி தோண்டி புதைச்சுரு மாமே’ என்ற வசனத்திற்கு பெயர் போன ’சீம்ஸ்’ நாய் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்து, உண்மையாகவே மண்ணுக்குள் மறையும் சூழ்நிலையும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொற்றுநோய் காரணமாக தனது சிரிக்க வைக்கும் பணியை முடித்த நாய், தற்போது வானத்தில் சுதந்திரமாக உலாசுகிறது என்று சீம்ஸ் நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ யாரும் கவலைப்பட வேண்டாம். பால்ட்சீ உலகிற்கு தந்த மகிழ்ச்சியை மட்டும் நாம் நினைவில் வைத்து கொள்ளலாம். உங்களையும், என்னையும் இணைக்கும் புன்னகையுடன் கூடிய ஒரு பந்தம்தான் பால்ட்சீ. தொற்றுநோய்களின்போது பலருக்கு உதவியிருக்கிறார். உங்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது பால்ட்சீ. ஆனால், இப்போது அதனுடைய சிரிக்க வைக்க பணி முடிந்தது, அவர் வானத்தில் சுதந்திரமாக உலாவுகிறார். தனது புதிய நண்பர்களுடன் நிறைய சுவையான உணவை சாப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
மேலும், ” முதலில் தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு, சீம்ஸுக்கு கீமோதெரபி அல்லது வேறு சில சிகிச்சைகளை வழங்க தயாராக இருந்தோம். ஆனால், இப்பொது கால தாமதமாகிவிட்டது” என்றும் குறிப்பிட்டார்.
சீம்ஸ் பற்றி சில தகவல்கள் இதோ..?
மீம்ஸ் உலகின் நாயகன் சீம்ஸின் உண்மையான பெயர் பால்ட்சீ. இது ஷிபா இனு என்ற நாய் வகையை சார்ந்தது. ஹாங்காங்கிலிருந்து ஒரு அன்பான குடும்பத்தால் அவர் ஒரு வயதில் தத்தெடுக்கப்பட்டார். 2010 ல் அவரது புகைப்படம் வைரலாகி, 2013க்கு பின் பிரபலமடைந்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சீம்ஸ், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக தீவிர சிகிச்சை பிரிவில் போராடி வந்தது. மேலும், இந்த ஓராண்டாக தன்னிச்சையாக உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளவில்லை. இந்த நிலையில், நோயால் துன்பப்பட்ட பால்ட்சீ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது