Pope Francis : பாலியல் உறவு.. அது அழகான விஷயம்...வெளிப்படையாக பேசிய போப் பிரான்சிஸ்..!

LGBT உரிமைகள், கருக்கலைப்பு, 18+ திரைப்படம் (Porn), பாலியல் உறவு, மத நம்பிக்கை, கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போப் பதில் அளித்துள்ளார்.

Continues below advertisement

'தி போப் ஆன்சர்ஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை டிஸ்னி+ தயாரித்துள்ளது. கடந்தாண்டு ரோமில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்களை சந்தித்து போப் பிரான்சிஸ் உரையாடியிருந்தார். இந்த சந்திப்பை ஆவணப்படுத்தி எடுத்திருப்பதே 'தி போப் ஆன்சர்ஸ்' படம். இதில், போப்பிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. 

Continues below advertisement

வெளிப்படையாக பதில் அளித்த போப்:

LGBT உரிமைகள், கருக்கலைப்பு, 18+ திரைப்படம் (Porn), பாலியல் உறவு, மத நம்பிக்கை, கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போப் பதில் அளித்துள்ளார்.

பாலியல் உறவின் நற்பண்புகளை பாராட்டி பேசிய போப், "மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்று பாலியல் உறவு" என்றார். சுயஇன்பம் குறித்து பேசிய அவர், "உங்களை பாலியல் ரீதியாக வெளிப்படுத்துவது ஒரு செல்வம். எனவே உண்மையான பாலியல் வெளிப்பாட்டிலிருந்து விலகும் எதுவும் உங்களைக் குறைத்து, இந்த செழுமையைக் குறைக்கிறது.

LGBT மக்கள் கத்தோலிக்க திருச்சபையால் வரவேற்கப்பட வேண்டும். எல்லா நபர்களும் கடவுளின் குழந்தைகள், எல்லா நபர்களும். கடவுள் யாரையும் நிராகரிப்பதில்லை. கடவுள் ஒரு தந்தை. மேலும் சபையிலிருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை" என்றார்.

கருக்கலைப்பு:

கருக்கலைப்பு குறித்து பேசிய போப், "கர்ப்பத்தை கலைக்கும் பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருட்களை பெயர் சொல்லி அழைப்பது நல்லது. கருக்கலைப்பு செய்த நபருடன் செல்வது வேறு விஷயம். செயலை நியாயப்படுத்துவது வேறு" என்றார்.

இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு போப் அளித்த பதில்களும் வாடிகனின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான L'Osservatore Romano-வில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான நேர்மையான உரையாடல்கள் என்ற பெயரில் போப்பின் பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வயது வந்தோருக்கான படம்:

முன்னதாக, வயது வந்தோருக்கான படங்கள் குறித்து பேசிய போப், "அதிகமாக செய்திகளை பார்ப்பதாலும் இசையை கேட்பதாலும் ஒருவரின் பணி பெரிய அளவில் தடைபடுகிறது. இதில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இணையத்தில் உள்ள ஆபாசப் படங்கள். 

இணைய ஆபாச படங்களை பார்க்கும் அனுபவம் உங்களுக்கு இருந்ததா அல்லது பார்ப்பதற்கு ஆசை இருந்ததா என்பதை ஒவ்வொருவரும் யோசித்து பாருங்கள். இது பல மக்கள், பல சாமானியர்கள், பல பாமரப் பெண்கள், மற்றும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் கூட இருக்கும் ஒரு தீமை.

சிறார் ஆபாட படங்கள் போன்ற ஆபாசத்தைப் பற்றி மட்டும் நான் பேசவில்லை. பாலியல் வன்கொடுமையின் நேரடி நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். அது ஏற்கனவே சீரழிவு. ஆனால், 'சாதாரண' ஆபாச படங்களும் பெரிய அளவில் சீரழிவை ஏற்படுத்துகிறது. அன்பான சகோதரர்களே, இதில் கவனமாக இருங்கள். ஒவ்வொரு நாளும் இயேசுவைப் ஏற்கும் தூய்மையான இதயம், இந்த ஆபாசத்தை ஏற்க கூடாது" என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola