2016ம் ஆண்டு நியூ ஜெர்சியில் சாரா பட்லர்,  தன்னுடைய அம்மாவின் மினிவேனை எடுத்துக்கொண்டு சென்று வீட்டிற்கு திரும்பி வராதபோது அவள் ஏதோ பிரச்சினையில் சிக்கிக்கொண்டதை அவளது குடும்பம் உணர்ந்தது.


ஒரு சமூக வலைதளத்தில் வீலர் வீவருடன் பேசத்தொடங்கியபோது சாரா ஒரு கல்லூரி மாணவி. அவனை நேரில் சந்திக்க சென்றபோது சாராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். அவளது உடல் ஈகிள் ராக் காட்டில் 10 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.


 முன்னதாக, சாரா வீட்டிற்கு திரும்ப வராத நிலையில் அவரின் கம்ப்யூட்டரை எடுத்து சாராவின் சகோதரியும் அவளது 2 நண்பர்களும்  சாராவுன் சமூக வலைதளங்களைப் பார்த்தனர். சாரா கடைசியாக பேசிய ஆளை அடையாளம் கண்டுக் கொண்டனர். தோழிகளில் ஒருத்தியான ரிவரும் அதே சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு அக்கௌண்ட்டை உருவாக்கினார். அப்போது சாராவிடம் கடைசியாக பேசிய அதே நபரிடமிருந்து மெசேஜ் வருகிறது. ரிவர் உடனே அருகில் உள்ள கஃபேயில் அவனை சந்திக்க திட்டமிட்டாள். ஆனால் போலிசார் பார்க்கிங்கில் காத்திருந்தனர்.  





அப்போது தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் வந்திறங்கினார் கலீல் வீலர் வீவர். சாரா காணாமல் போயிருந்த சூழலில் கலீல் வீலர் வீவருக்கு அதில் தொடர்பிருக்குமோ என போலிசார் சந்தேகித்தனர். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் சாரா காணாமல் போனதைப் பற்றி அவரிடம் விசாரித்தனர்.. ஆனால் காணாமல் போன சாராவின் உடல் கிடைக்காத காரணத்தால் அவரை கைது செய்யவில்லை. 10 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் ஒரு காட்டில் சாரவின் உடல் கிடைத்தது. 


வீலர்-வீவர் வெளித்தோற்றத்தில் அழகாக இருந்துள்ளார்.  ஏழை, வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களை குறிவைத்து  சித்திரவதை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அவர்களை தூங்க வைப்பதற்காக ஆன்லைனில் அனஸ்தீசியா மயக்கமருந்தை வாங்கியுள்ளார். வீட்டிலேயே செய்யப்பட்ட விஷத்தையும் பயன்படுத்தியுள்ளார்..


வெஸ்ட் என்ற பெண்ணை துன்புறுத்தி அவள் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். யாருமில்லாத ஒரு வீட்டில் அந்த உடலையும் வீசிச்சென்றுள்ளார். வீசப்பட்ட அவரது உடல் பாகங்கள் முழுவதும் கருகியிருந்தது. பற்களை வைத்துதான் இன்னாரின் உடல் என்பதே அடையாளம் காணப்பட்டது.


இந்நிலையில் சரியாக 5 ஆண்டுகள் கழித்து, 25 வயதான வீலர் வீவர் சாராவை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். சாரா மட்டுமல்லாது ராபின் வெஸ்ட் 19, ஜோன் பிரவுன் 33 ஆகியோரையும் கொலை செய்தது தெரியவந்தது. அது மட்டுமல்லாது டிஃபனி டெய்லர் என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஆகஸ்ட் 2016ஆம் ஆண்டிலிருந்து நவம்பருக்குள்ளாக இத்தனையையும் செய்திருக்கிறார் வீலர் வீவர்.




பட்லரை கொலை செய்வதற்கு முன்பாக டெய்லர் என்ற பெண் வீவரின் கைகளிலிருந்து தப்பிப் பிழைத்தார். கைகளை கட்டி, வாய் மூக்கு ஆகியவற்றை டேப்கொண்டு கட்டியதாகவும் தெரிவிக்கிறார் டெய்லர். அவனின் கைகளிலிருந்து தப்பி வந்த பின்பு தலை வாருவதில்லை, நண்பர்களிடம் பேசுவதில்லை. உண்மையில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை என தெரிவிக்கிறார் டெய்லர்.


இந்நிலையில்தான் 2016ல் சாராவின் சகோதரியும் அவளது 2 நண்பர்களும்  சாராவுன் சமூக வலைதளங்களைப் பார்த்து சாரா கடைசியாக பேசிய ஆளை அடையாளம் கண்டு போலிசில் சிக்கவைத்தனர். அதிலிருந்து ஒவ்வொரு கொலைக்கும் துப்பு துலக்கினர் போலிஸ். இதையடுத்து தற்போது வீவருக்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


வீடற்றவர்கள்,மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை குறிவைத்து வரிசையாக கொலை  செய்திருக்கிறார் வீவர். யாரும் அவர்களை தேடி வரமாட்டார்கள், இறுதியில் எல்லாரும் அவர்களை மறந்துவிடுவார்கள் என நினைத்துதான் ஒவ்வொரு கொலையையும் செய்திருக்கிறான்.


இந்த வழக்கில் முதல் துப்பை துலக்குவதற்காக உதவியதற்காக பட்லரின் சகோதரிக்கும் அவளது நண்பர்களுக்கும் இந்த வழக்கின் வழக்கறிஞர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 
மற்றவர்கள் வழக்கமாக செய்வதைக் காட்டிலும் ஒரு படி மேலாக சாராவின் சகோதரியும், அவளது நண்பர்களும் சென்றிருக்கிறார்கள். இது அவர்களின் அன்பின் சான்று என்றும் தெரிவித்தனர்.