அழுகை... அற்புதமானது. துன்பத்தின் வெளிப்பாடு, இன்பத்தின் இறுதிச்சுற்று, ஆனந்தத்தின் கண்ணீர் இப்படி பல வழிகளில் நம் விழிகளில் வரும் ஊற்று. ‛மாமன் அடிச்சாரோ... மல்லிகைப் பூ சென்டாலே...’ என்பதில் தொடங்கி... ‛கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே...’ என கண் கலங்கும் வரை அழுகைக்கு அத்தனை அர்த்தம் இருக்கிறது. 


‛மனசில அடக்கி வைக்காதே... அழுதுடு அழுதுடு...’ என அதிக டயலாக்குகள் சினிமாவில் அதிலும் தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும். இன்னும் கூட வரும். அழுதால் தான் உங்களுக்குள் சோகம் இருப்பதே பலருக்கும் புரியும். சிலர் அழுவது பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக கழிப்பறைக்கு சென்று அழுத சம்பவங்கள் கூட இங்கு நடந்திருக்கு. ‛ரூம் போட்டு சிரிச்சேன்...’ என்பதைப் போல ‛ரூம் போட்டு அழுதேன்...’ என்கிற கிண்டல் வார்த்தையையும் பலர் உபயோகித்துகேட்டிருப்போம். இதெல்லாம் யாருக்கு கேட்டதோ இல்லையோ... ஸ்பெயினில் கேட்டுவிட்டது போல... ஸ்பெனில் அழுது புலம்ப தனி அறை அமைத்துவிட்டார்கள். 


‛அழுகை அறைக்கு வரவேற்கிறோம்...’ என்கிற வாசகத்துடன் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள இந்த அழுகை அறை,மனநல பாதிப்பு அதிகரித்து தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் மனதில் கவலை இருந்தால், துன்பம் இருந்தால், துயரம் இருந்தால், இந்த அறைக்கு வந்து தேம்பி தேம்பி அழலாம். தேவைப்பட்டால் ஆலோசனைகளை பெற மருத்துவம் தொடர்பான எண்களும் அங்கு எழுதப்பட்டிருக்கும். கவலைகளை அழுது தீர்த்து, ப்ரெஷ் பீஸாக அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பது தான் அழுகை அறையின் நோக்கம். 


இதோ அழுது புலம்பும் அழுகை அறையின் வீடியோ காட்சி...


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர









ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண