கணவன்-மனைவி தொடர்பான பல வழக்குகள் உலகம் முழுவதும் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில வழக்குகள் மிகவும் விசித்திரமானவையாக இருக்கும். அந்தவகையில் தற்போது ஒரு வழக்கு அமைந்துள்ளது. இந்த வழக்கில் கணவர் மீது மனைவி அளித்த புகார் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 




நைஜீரியா நாட்டின் ஜிகோவி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் அனாகு. இவர் ஒரு அரசாங்க ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அபுஜா என்ற நபருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அபுஜா ஒரு டெக்ஸி ட்ரைவராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு விவாகரத்து கேட்டு சென்றுள்ளது. அதில் எஸ்தர் தரப்பில் கூறப்பட்டுள்ள புகார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 


இந்த வழக்கில் எஸ்தர், “என்னுடைய கணவர் எப்போதும் உடலுறவு வைத்து கொண்ட பிறகு என்னுடைய பிறப்பு உறுப்பில் டிஸ்யூ பேப்பரை திணித்துவிடுகிறார். இது குறித்து நான் அவரிடம் கேட்ட போது அதை நான் செய்யவில்லை என்று கூறினார். அதற்காக ஒரு முறை இவரை கையும் களவுமாக பிடிக்க ஒரு திட்டத்தை வகுத்தேன். அதில் அவர் என்னுடைய பிறப்பு உறுப்பில் உடலுறவுக்கு பின்பு டிஸ்யூ பேப்பரை வைக்கும் போது சிக்கினார். ஆகவே எங்களுக்கு விவாகரத்து அளிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். 


அவரின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த வழக்கில் எஸ்தர் மற்றும் இமானுவேல் அபுஜா ஆகிய இருவரும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார். அப்படி பிரிய விரும்பினால் அவர்கள் இருவரும் அனைத்து முறையும் நன்றாக கலந்து ஆராய்ந்து கொள்ளவும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் வரும் மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். கணவர் உடலுறவிற்கு பின்பு தன்னுடைய பிறப்பு உறுப்பில் டிஸ்யூ பேப்பரை வைக்கிறார் என்று கூறிய பெண்ணின் குற்றச்சாட்டு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அப்பகுதியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதுவும் பெண்கள் மீதான வன்முறைகள் ஒன்று என்று அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண