இத்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள ஒரு வண்டுக்கு ட்ரிக்னோப்ரஸ் கொரோனா என விஞ்ஞானிகள் பெயர் சூட்டி உள்ளனர்.


இந்தோனேசியா நாட்டில் உள்ள சுலாவெசி என்ற தீவில் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் 28 வகையான வண்டுகளை கண்டுபிடித்து இருக்கின்றனர். அனைத்து வண்டுகளும் 2 முதல் 3 மில்லி மீட்டர் அளவில் உள்ளன. இந்த 28 வண்டுகளும் ஜோர்னல் சூக்கீஸ் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.


இதில் ஒவ்வொரு வண்டுக்கும் தனித்தனியாக பெயர் வைத்து உள்ள விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு மட்டும் ட்ரிக்னோப்ரஸ் கொரோனா என பெயரிட்டு இருக்கின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் இந்த வண்டுக்கு பெயரிடுவதிலும் இருந்து இருப்பதாக 28 வண்டுகளின் கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டு இருக்கும் ஆராய்ச்சி இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.




கொரோனாவை பூச்சி இனத்துக்கு பெயராக இடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கொசாவோவின் ஓடை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்திப் பூச்சி போன்ற ஒரு பூச்சிக்கு விஞ்ஞானிகள் பொடாமோபுலாக்ஸ் கொரோனா வைரஸ் என பெயர் சூட்டியது அப்போது செய்திகளில் வலம் வந்தது. கொரோனா வைரஸின் பெயரை வைத்தே இந்த பூச்சிக்கு பெயரை சூட்டியதாக பயோ டைவர்சிடி டேடா ஆய்வு இதழில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர்.


அதே மாதம் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட 6 புதிய வகையிலான குளவிகளுக்கு அல்லார்ஹகாஸ் குவாரண்டெனஸ் என பெயர் சூட்டப்பட்டதாக ஹைமெனோப்டிரா ஆராய்ச்சி இதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் குவாரண்டெனஸ் என்ற பெயர் கொரோன பரவலை தடுக்க தனிமைப்படுத்தலில் இருப்பதற்காக சொல்லப்படும் குவாரண்டைன் என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டதாக அந்த குளவியை கண்டுபிடித்த ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.


அதே போல் இம்மாதத்தின் தொடக்கத்தில் மெக்சிகோ நாட்டில் 5 புதிய வகையான குளவிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரு குளவிக்கு ஸ்டெதண்டிக்ஸ் கோவிடா என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டின. கொரோனா வைரஸ் இனத்தில் தற்போது உலககத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருப்பது கோவிட் 19 என்ற வைரசாகும். அதை வைத்து மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட குளவிக்கு பெயரை வைத்து உள்ளார்கள் விஞ்ஞானிகள்.


கொரோனா வைரஸின் தோற்றும் அரசர்களின் கிரீடம் போல் இருப்பதால் அதன் ஆங்கில அர்த்தமான CROWN என்ற வார்த்தை கொண்டு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டினர். தற்போது அதை வைத்தே மனிதர்கள், பூச்சிகள், நிறுவனங்கள், சினிமாக்கள், உணவு பொருட்களுக்கு பெயர்களை சூட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.


21 ஆம் நூற்றாண்டில் 2 ஆண்டுகளாக உலகத்தையே முடக்கிப்போட்ட கொரோனா வைரஸ் வரலாறு நெடுகிலும் இந்த பெயர்களின் மூலமாக ஒலித்துக் கொண்டிருக்கும்.