சவுதி அரேபியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் தற்போது விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


சவுதி அரேபியா


வெளியான தகவலின்படி, சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா செல்ல சவுதி ஏர்லைன்ஸில் டிக்கெட் வாங்கியவர்கள் நான்கு நாட்களுக்கு விசா இன்றி அங்கு செல்லலாம். அதுமட்டும் இன்றி, உம்ரா புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளார்கள்.


இது தொடர்பாக பேசிய சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்லா அல் ஷாராணி, "சவூதி ஏர்லைன்ஸ் விரைவில் உங்கள் டிக்கெட் ஒரு விசா திட்டத்தை அறிவிக்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதன் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 96 மணிநேரம் சவுதி அரேபியாவில் தங்கலாம்.


உம்ரா 


பயணி டிக்கெட்டை வாங்கும்போது, ​​அவர்களுக்கு விசா தேவையா? இல்லையா? என்று கேட்கப்படும். அவர்கள் வேண்டும் என குறிப்பிட்டால், அவர்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். சில நடைமுறைகளை முடிக்க வேண்டியிருக்கும். இவற்றை மூன்று நிமிடங்களுக்குள் செய்து முடித்து விடலாம்.


இந்த சேவையை வழங்குவதற்கான காரணம் என்னவென்றால், பல இஸ்லாமிய குடும்பங்கள் சவுதி அரேபியாவை, குறிப்பாக ஜித்தா நகரத்தை உம்ரா புனித சடங்குகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான இடமாக கருதுகிறார்கள்.


எல்லாம் சரியாக நடந்தால், இந்த புதிய சேவை நாட்டிற்குள் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கிடையில், விமான நிறுவனம் தனது சர்வதேச விமானங்களை 40 சதவீதம் அதிகரிக்கவும், இந்த ஆண்டு அதன் உள்நாட்டு விமானங்களில் 500,000 கூடுதல் இருக்கைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது" என்றார்.


உங்கள் டிக்கெட் ஒரு விசா திட்டத்தின் மூலம் சவுதி அரேபியா முழுவதும் சுதந்திரமாக சுற்றி திரிந்து உம்ரா புனித பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், இந்த விசா எப்போதிலிருந்து விநியோகிக்கப்படும் என சவுதி அரேபியா அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.


புதிய நடைமுறை என்ன..?


சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் பயணிகள் விமான டிக்கெட்  புக் செய்யும் போது விசா தேவையா? என்ற கேள்வி எழுப்பப்படும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்பதை செலக்ட் செய்தால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்து விடும்,


உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்ற இந்த புதிய வகையான விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் நீங்கள் செல்லலாம். பயணத்தை முடித்துக் கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்திலிருந்தும் தாயகம் திரும்பலாம்.


டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.