யானைகளுக்குப் பிறகு இரண்டாவது பெரிய பாலூட்டி இனம் ஹிப்போபொட்டமஸ் எனப்படும் நீர் யானைகள்.


பொதுவாக 3,000 பவுண்டுகள் எடையுள்ளவையாக விளங்கும் நீர் யானைகள் பிறக்கும்போது வெறும் 100 பவுண்டுகள் எடையுடன் மட்டுமே பிறக்கின்றன.






துறுதுறுவென சுற்றி பொதுவாக இணையத்தில் லைக்ஸ் அள்ளும் யானைக் குட்டிகளைப் போலவே இந்தக் குட்டி ஹிப்போக்களும் சற்றே எடைகூடிய குட்டிகளாகவும், க்யூட்டான விலங்குகளில் ஒன்றாகவும் வலம் வந்து இணையத்தில் சமீபகாலமாக லைக்ஸ் அள்ளுகின்றன.


அந்த வகையில் முன்னதாக மிருகக்காட்சிசாலை ஒன்றில் குளத்தில் நீர்யானைக் குட்டி ஒன்று க்யூட்டாக நீந்தும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. 


குட்டையான சிறிய கால்கள், சிறிய காதுகள் மற்றும் பெரிய பளபளப்பான தலையுடன் நீரிலிருந்து தலையை நீட்டி இந்தக் குட்டி நீர்யானை நீந்தும் நிலையில், மற்றொரு நீர்யானையும், பொம்மை வாத்து ஒன்றும் நீர்யானையுடன் நீந்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 






நேச்சர் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில்  வைரலாகி உள்ளது. 2 லட்சம் பார்வையாளர்களையும் 21 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று நெட்டிசன்களின் உள்ளங்களைக் கவர்ந்து வருகிறது. 


குட்டி ஹிப்போவின் அழகை வர்ணித்தும் அதன்  ”மூக்கை முத்தமிட விரும்புகிறேன்" என்பன போன்ற கமெண்டுகளைப் பகிர்ந்தும் ஹிப்போவை ரசித்து வருகின்றனர் இன்ஸ்டாவாசிகள்