அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டனியோ (San Antonio, Texas) பகுதியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டது தொடர்பாக இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
39 ஆண்கள், 12 பெண்கள், குழந்தைகள் என டிரெக்கில் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு Juan Francisco D’Luna-Bilbao மற்றும் Juan Claudio D’Luna-Mendez இருவம் மீதும் வழக்கு பதிவு செய்யபப்ட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கன்டெய்னரை ஓட்டி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இவர்மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை முடிந்த பிறகே வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று மெக்சிகோ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லை பிரச்சினை பல காலங்களாக தொடர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கண்டெடுக்கப்பட்ட 46 பேரும் கன்டெய்னரில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்