ரஷ்யாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் ரவில் மகனோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மர்ம மரணம்:
ரஷ்யாவில் உள்ள லுக் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் தலைவராக ரவில் மகனோவ் பணி புரிந்த வந்தார். அவர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரது மரணத்தை உறுதிப்படுத்திய அந்நிறுவனம், 67 வயதான மகனோவ் "கடுமையான நோயால் காலமானார்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
அவர் ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த சிறிது காலத்திற்குப் பின்னர், லுக் ஆயில் வாரியம் இந்த மோதலை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது, "இந்த துயரத்தால்" பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அனுதாபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், அவர் உயிரிழப்பு, மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பதை உறுதிப்படுத்த சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவில் செல்வாக்கு மிக்கவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கோடீஸ்வரரான நோவா டெக்கின் முன்னாள் மேலாளர் செர்ஜி புரோட்டோ சென்யாவின் உடல் ஏப்ரல் மாதம் ஒரு ஸ்பானிஷ் வில்லாவில் அவரது மனைவி மற்றும் மகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- காஸ்ப்ரோம் பேங்க் முன்னாள் துணைத் தலைவரான விளாடிஸ்லாவ் அவயேவ், ஏப்ரல் மாதம் மாஸ்கோவில் உள்ள பிளாட்டில் தனது மனைவி மற்றும் மகளுடன் இறந்து கிடந்தார்.
- மே மாதம், முன்னாள் லூகோயில் தொழிலதிபர் அலெக்சாண்டர் சுபோடின் இதய செயலிழப்பால் இறந்ததும் மர்மமாக பேசப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், மகனோவ் மரணமடைந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.