உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 15 நாடுகள் ஆதரவு அளித்தநிலையில், இந்தியா நடுநிலை வகித்தது. 


இந்தியாவை தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு அமீரகமும் உள்பட பல நாடுகள் நடுநிலை வகித்தனர். ஆனால், 15 நாடுகள் கொண்ட கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா நிரந்தர உறுப்பினராக வாக்களித்தது. 


போர் தொடக்கம் : 


உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.


கடந்த 2 நாட்களை தொடர்ந்து 3 வது நாளான இன்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், அந்த பகுதிகள் முழுவதும் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று  ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டார். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு உக்ரைன் ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.






உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சு வார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க வெளியிட்ட தீர்மானத்தை ரஷ்யா தகர்த்துள்ளது அனைத்து நாடுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண