உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 


 






 


இந்த நிலையில் இது குறித்து உக்ரைன் அதிபர் கூறியதாவது: -


சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் ரஷ்யா முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மீதான தனது படையெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார். 


 






ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.


 


இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உக்ரைன் தரப்பில் அன்டன் கோரினெவிச் பேசும் போது, “ உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். ட்ட விரோத தாக்குதல்களை முன்வைத்து வரும் ரஷ்யா, போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.