உக்ரைன்- ரஷ்யா போர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் அரசு முயன்றது. இது ரஷ்யாவுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தொடங்கியது. முதலில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்கினர். அதற்கு ஈடாக உக்ரைனும் போராடியது. உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். மேலும் பல ஆயுதங்களையும் வழங்கின. இப்படியே போர் தொடங்கி ஓராண்டாகத் தொடர்கிறது.
இந்த உக்ரைன் ரஷ்யா போரில் சுமார் 43 ஆயிரம் பொதுமக்களும், 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த போரினால் 57 ஆயிரம் படுகாயமடைந்துள்ளதகா கூறப்படுகிறது.மேலும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை டேனேட்ஸ்க், கேர்சன் லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20 சதவீத பரப்பளவை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்தது.
இந்த போரால் இரு நாடடுகளுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் முயற்சித்தனர். ஆனால் முடிவுக்கு வராமல் ஓராண்டாக நடந்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போர் ஓராண்டை நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை பிரதிபலிக்கும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடியில் பிரதிபலித்தது. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.
விரைவில் சந்திப்பு
இந்த போர் ஓராண்டை கடந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா போர் ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீன ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திப்பதாக தெரிவித்தார். இருப்பினும் எப்போது இந்த சந்திபு இருக்கும் என்று தெரியப்படவில்லை. மேலும், சீனா தரப்பில் இருந்து இந்த சந்திப்பிற்கு எந்த தகவலும் வரவில்லை என்பது தெரிகிறது.
மேலும் இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது, ” நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்தித்து பேசுவேன், ஆனால் ரஷ்ய அதிபருடன் எந்தவித சமரசப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக இல்லை. இருதரப்புக்கு அமைதியை கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நான் சந்திக்கிறேன்” என்றார் ஜெலன்ஸ்கி.
மேலும் படிக்க