பணி நேரத்தில் கூட பாலியல் உறவு வைத்து கொள்ளலாம் என தனது குடிமக்களுக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அட்வைஸ் கொடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரஷியாவின் மக்கள் தொகை குறைகிறதா?
உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. குறிப்பாக, நைகர், உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் பிறப்பு விகிதம் உச்சத்தில் உள்ளது.
நிலைமை இப்படியிருக்க, ரஷியாவின் நிலை தலைகீழாக உள்ளது. அந்நாட்டில் கருவுறுதல் விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 1.5 விழுக்காடாக கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. அதாவது, ரஷியாவில் சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் 1.5 குழந்தைகளை பெற்றெடுக்கிறார்.
இது மக்கள்தொகை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான 2.1 விகிதத்தை விட மிகக் குறைவு. ரஷியாவின் மக்கள்தொகை தற்போதைய 144 மில்லியனில் இருந்து 2050 ஆம் ஆண்டில் சுமார் 130 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்வைஸ் கொடுத்த புதின்:
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் முக்கிய அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். "ரஷிய மக்களைப் பாதுகாப்பதே தேசத்தின் முன்னுரிமை. ரஷியாவின் தலைவிதி நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி.
நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்த்துப் போராட வேண்டி இருக்கிறது. எனவே, வேலை செய்யும் இடத்தில், மதிய உணவு மற்றும் காபி இடைவேளையின் போது பாலியல் கொள்ளுமாறு ரஷியர்களுக்கு அறிவுறுத்துகிறேன்" என்றார்.
இதேபோன்ற அட்வைஸைதான் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி இருக்கிறார். "குடும்பத்தை விரிவாக்க மதிய உணவு மற்றும் காபி இடைவேளையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஷியர்களை வலியுறுத்துகிறேன். இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.
வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. அது, ஒரு நொண்டி சாக்கு. இடைவேளையின் போது நீங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடலாம். இடைவேளையின் போது குழந்தைகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்" என்றார்.
ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசு சார்பில் நிதி ஊக்கத்தொகையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 24 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் 1.02 லட்சம் ரூபிள் (ரூ 9.40 லட்சம்) வழங்கப்படுகிறது.