பெரியார் பிறந்தநாள் - முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை


தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.


சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” - தவெக தலைவர் விஜய் அறிக்கை


இதுதொடர்பான அறிக்கையில், மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என விஜய் என குறிப்பிட்டுளார்.


ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு

கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி பெருங்காடு கிராமத்தில் உள்ள அளத்துறை ஆற்றை கடக்க முயன்றபோது, ஒன்றரை வயதான குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தது. வனத்துறையினர் உடலை மீட்டு புதைத்தனர்.

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் - முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து


பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன் என, தவெக தலைவர் விஜயும் வாழ்த்து கூறியுள்ளார்.


ஈரானுக்கு பதிலடி தந்த இந்தியா..!


இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர் என ஈரான் தலைவர் அயதுல்ல அலி காமேனி தெரிவித்து இருந்தார். அவரது கருத்தை முற்றிலும் மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தங்களது வரலாற்றை பார்க்க வேண்டும் என வல்யுறுத்தியுள்ளது. 


டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்?


டெல்லி முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அதைதொடர்ந்து நடைபெறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்ன் என்பது முடிவு செய்யப்பட உள்ளது. 


தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் பலர் மருத்துவமனையில் அனுமதி!


ஆந்திரா: அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியர் சொல்பேச்சை கேட்காத மாணவிகளை தொடர்ந்து 3 நாட்கள் 200 தோப்புக்கரணம் வரை போடவைத்ததால் 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி. இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு வலியுறுத்தல்


75 ஆண்டுகளில் இல்லாத மோசமான சூறாவளி


ஷாங்காய் நகரை கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. சுமார் 150 கிமீ வேகத்தில் அந்த பகுதியில் சூறாவளி காற்று விசியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தனர். 


ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை


சில நாட்களில் ஐ.நா. அமைப்பால் தொடங்கப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு,  ஆளும் தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இதரற்கான காரணம் குறித்து அரசு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.  இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.



ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று பலப்பரீட்சை


இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவுடன் மோதுகிறது. ஏற்கனவே லீக்கில் சீனாவை 3-0 கோல் கணக்கில் வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை.