கொரோனா  வார்டில் உள்ள தனது பாட்டியை டாக்டர்கள் சரிவர கவனிக்காததால், டாக்டர் போல் வேடமணிந்து பாட்டியை கவனித்த பேரன் மாட்டிக்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.


சைபீரிய நகரமான டாம்ஸ்கில், 4 வயதுடைய பாட்டி நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அல்சைமர் நோய் உள்ளது மற்றும் பேசவோ நகரவோ முடியாது.


இந்த நிலையில், அந்த பாட்டியை டாக்டர்கள் சரியாக கவனிக்கவில்லை, சகநோயாளிகள் பேரனிடம் கூறியுள்ளார். இதனால், பாட்டியின் உடல்நிலை குறித்து கவலைப்பட்ட பேரன், கொரோனா வார்டுக்குள் நுழைவதற்காக பாதுகாப்பு உடை, கையுறைகள் மற்றும் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு, நுழைவாயிலில் தன்னை வேறொரு துறையின் சிகிச்சையாளராக அறிமுகப்படுத்தினார்.


மூன்று நாட்களாக பேரன் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்கு சென்று பாட்டியை கவனித்துக் கொண்டார். மூன்றாம் நாள், டாக்டர் ஒருவரிடம் மருத்துவமனையின் வசதியின் நிலைமைகள் பற்றி கேட்க முயன்றார். ஆனால் அவர் சந்தேகமடைந்த அந்த டாக்டர், என்ன வகையான டாக்டர் என்று கேட்டார். உடனே, கைது செய்யக்கூடாது என்பதற்காக, பேரன் பாட்டியிடம் விடைபெற்று தப்பியோடிவிட்டார்.




பின்னர் அந்த நபர் தனது பாட்டியின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் தகவல் பெற முயன்றார். ஆனால் யாரும் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவரால், சுகாதாரத் துறை, சுகாதார காப்பீட்டு நிறுவனம் மற்றும் விசாரணைக் குழுவின் ஹாட்லைனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.


கவலையடைந்த பேரன் பின்னர் விசாரணைக் குழுவின் தலைவரிடம் புகார் அளிக்க மாஸ்கோவிற்குச் சென்றார். புகாரை மறுபரிசீலனை செய்ய ஒரு மாதம் வரை ஆகலாம் என்று கூறப்பட்டது. பின்னர், இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேரன் அளித்த பேட்டியில், தனது பாட்டி தனக்கு மாற்றுத் தாய் என்றும், அவருக்கு தகுந்த கவனிப்பு கிடைப்பதற்கும், டாக்டர்கள் தண்டிக்கப்படுவதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறினார்.


அவரின் இந்தப் பேட்டி ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்ட பிறகு, இந்த சம்பவத்திற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணை நடத்தி மருத்துவமனை அதிகாரிகளை பொறுப்பேற்க வைப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஏற்கெனவே விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக் குழு மற்றும் சுகாதார ஆய்வாளர்களும் வழக்கை விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண