தென் அமெரிக்க நாடான சிலியில் அமைந்துள்ளது புடாஹுவேல் மாகாணம். இங்கு உள்ள பொழுதுபோக்கு விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பல் புகுந்ததுள்ளது. பின்னர், அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, அந்த பொழுதுபோக்கு விடுதியின் நிர்வாகிகள் கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக கொள்ளையர்கள் சென்ற காரின் வழித்தடத்தை கண்டறிந்தனர்.






அப்போது அவர்கள் ​​புடாஹுவேல் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் காரை ஓட்டிச் சென்றனர். இதற்கிடையில், போலீசார் கொள்ளையர்களின் காரை துரத்திச் சென்றதால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கொள்ளை கும்பல் ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, காவல்துறையின் கவனத்தை திசை திருப்பவும், மக்களை ஈர்க்கவும் பணப்பையை சாலையில் வீசிச் சென்றனர். அந்த பணப்பையிலிருந்து சுமார் 10 மில்லியன் பணத்தை கொள்ளையர்கள் சாலையில் வீசியுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக சாலைக்கு பணத்தை எடுக்க ஓடினர். 






இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்று கொள்ளையர்களின் காரை மடக்கிப் பிடித்தனர். அந்த காரில் இருந்த கொள்ளையர்கள் 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சாலையில் வீசப்பட்ட பணத்தையும் போலீசார் சேகரித்துள்ளனர். ஆனால், காற்று வீசியதால் அப்பகுதியைச் சுற்றி இருந்த பொதுமக்கள் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிகிறது. தற்போது, அந்த பொழுதுபோக்கு விடுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தினை கொள்ளையர்கள் சாலையில் வீசிய சிசிடிவி காட்சி பதிவுகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.