Rishi Sunak: பிரதமர் பதவிக்கு மீண்டும் ரிஷி சுனக் போட்டி..! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்..?

Rishi Sunak: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக, ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

கடந்த 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு யார் வருவார்? என்று எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அடுத்தடுத்து, பிரதமர் மாறிக் கொண்டே இருக்கும் இங்கிலாந்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

போரிஸ் ஜான்சன் விலகல்:

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். பின்னர், அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன. இதனால், அவர் மீது கட்சிக்குள்ளே எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் ராஜினாமா செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.

லிஸ் டிரஸ் விலகல்:

பின்னர், வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய லிஸ் டிரஸ், செப்டம்பர் மாதம் 5ம் தேதி பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், இவரும் கடந்த 20ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இவர் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த மினி பட்ஜெட்டில், வரி குறைப்பு செய்யப்பட்டது. அதனால் பிரிட்டன் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் டாலருக்கு எதிரான பவுண்ட் மதிப்பு சரிவை சரிய ஆரம்பித்தது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் க்வார்ட்டங்கை, லிஸ் டிரஸ் பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் வரி குறைப்பு தொடர்பான குழப்பம் நீடித்து வந்த நிலையில், கடந்த 20ம் தேதி, தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.

பதவியேற்ற 6 வாரங்களுக்குள் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முதல் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார்.

ரிஷி சினக் போட்டி:

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரிஷி சுனக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. ஆனால், இந்த சிக்கலை மீட்டு கொண்டு வருவேன் என்றும் வாய்ப்பு வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

Also Read: UK PM Resigns: பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் ராஜினாமா!

Continues below advertisement
Sponsored Links by Taboola