பொதுவாக ஒருவர் தண்ணீரில் மிதப்பதை கண்டால் உடனே தீயனைப்பு மற்றும் அவசர உதவிக்கு நாம் அழைத்து தகவல் தெரிவிப்பது வழக்கம். அப்படி ஒருவர் ஒரு பெண் உருவம் தண்ணீரில் மிதப்பதை கண்டு அவசர உதவிக்கு அழைத்துள்ளார். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினருக்கு பெரிய ஏமாற்றமே வந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது?
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு கடலோர பகுதியான ஹாச்சினோ கடற்பகுதியில் ஒரு பெண் மிதப்பது போல் தெரிந்துள்ளது. இதை பார்த்த டனாகா என்ற நபர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் மிதந்து கொண்டிருந்த பெண் என நினைத்தவரை மீட்டனர்.
அதன்பிறகு தான் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அவர்கள் இவ்வளவு சிரமத்துடன் மீட்டது பெண் இல்லை என்பது தெரியவந்தது. அது பெண் தோற்றத்தை கொண்ட ஒரு செக்ஸ் பொம்மை என்பது தெரிய வந்தது. அத்துடன் தீவிரமாக பெண்ணின் சடலம் என்று நினைத்து மீட்ட மீட்பு படையினர் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை - எச்சரிக்கும் அதிபர்..!
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் பார்த்த ஒருவர்,”நான் என்னுடைய கேமராவில் மீன் பிடிப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்தேன். அப்போது தண்ணீரில் ஒரு பெண் மிதப்பது போன்று எனக்கு தெரிந்தது. இதனைத் தொடர்ந்து நான் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தேன்.
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் போராடி அந்த பெண் சடலத்தை மீட்டனர். அதன்பின்னர் பெண் இல்லை ஒரு செக்ஸ் பொம்மை என்று தெரிந்தவுடன் பெரிய வருத்தம் ஏற்பட்டது” எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒருவர் ஜப்பானிய மொழியில் தனது ட்விட்டர் பக்கதிலும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆபத்து காலத்தில் தங்களது உயிரை பனையம் வைத்து மீட்கும் படையினருக்கு இந்தச் சம்பவம் ஒரு பெரிய துயரமாக அமைந்துள்ளது. மீட்பு படையினர் அந்தப் பெண் சடலம் என்று நினைத்தை பல மக்கள் பார்த்தனர். அவர்களும் மீட்பு படையினர் அச்சடலத்தை மீட்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர். அவர்களுக்கும் இந்த செக்ஸ் பொம்மை பெரிய ஏமாற்றத்தையே அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஒரே பிரசவத்தில் 10 குழந்தை: பொய் சொன்ன பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி!