இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே முக்கியம்;ஆனால், சீன அரசு இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கிடையினால அடிப்படி விதிகளை மீறும் வகையில் நடந்து கொள்வது அந்நாட்டின் தனிப்பட்ட பண்பையும், அவர்களின் அணுகுமுறையையும் பிரதிப்பலிப்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சீன தூதரின் சர்ச்சைக்குரிய டிவிட்டுக்கு கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கத் தவிக்கும் இலங்கையின் கடல் பகுதியில், சீன அரசு தனது விண்வெளி ஆய்வுக் கப்பலான ’யுவான் வாங்-5’ ஆகஸ்ட் 16ஆம் தேதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைத்தது. இதற்கு முதலில் இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. பின்னர், சீனா இலங்கை அரசிடம் தொடர்ந்து இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி ‘யுவான் வாங்-5’ கப்பலை இலங்கைக்கு அனுப்ப அனுமதி பெற்றது. எனினும், செயற்கைக்கோள் போன்ற பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கப்பல், ராணுவ தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் அபாயம் இருந்ததால், இதை அம்பன்தோட்டா பகுதியில் நிறுத்திவைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இலங்கை ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் தவித்துவரும் நிலையில் சீனா இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன.
இலங்கைககான சீன தூதரின் கருத்திற்கு இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதர் ட்வீட்:
இலங்கைகான சீன தூதர் Qi Zhenhong, தனது டிவிட்டரில், சீன அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருவதாகவும், இனி வரும் காலங்களிலும் தங்களது ஆதரவை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,அந்நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள் இலங்கையின் இறையான்மை மற்றும் சுதந்திரத்தில் தொடர்ந்து தலையிடுவதாக கூறியிருந்தது.
’யுவான் வாங் 5’ கப்பல் விவகாரத்தில், இதுகுறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுதல் விளைவிக்கும் விதத்தில் சீனா செயல்படுவதாக கூறுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகம் பதில்..
இந்த விவகாரத்தில் சீன தூதரின் கருத்தையும், செயல்களையும் இந்தியா கவனிக்கிறது. அவரின் கருத்துகள் இந்தியா மீதான வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. இலங்கை யுவான் வாங்- 5 கப்பல் விஷயத்தை சர்வதேச அரசியலுடன் அணுகுவது முறையற்றது.
இலங்கை இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் அவர்களுக்கு தேவையானது உதவியும் ஆதரவுதான். அவர்களுக்கு கூடுதலாக அழுத்தத்தையோ, சர்ச்சைகள் மிகுந்த சூழலையொ ஏற்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா சீனா இடையே டிவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.