பிற நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு மற்றும் இதிகாசங்கள் தமிழ் மொழியில் பாடத்திட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தங்களுடைய பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுத்துள்ளது. 


சவுதி அரேபிய நாட்டின் தற்போதைய பட்டத்து இளவரசராக இருப்பது முஹம்மது பின் சல்மான், இவருடைய ஆட்சி காலத்தில் வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவை கலாச்சாரம், அறிவியல், கட்டமைப்பு மற்றும் கல்விபோன்ற போன்ற பல விஷயங்களில் சிறந்த நாடாக மாற்ற திட்டமிட்டு அதற்காக விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கல்வியிலும் சிறந்து விளங்கும் வண்ணம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் அறிவியல் வரலாறு ஆகியவற்றையும் சவுதி அரேபிய மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 






இதன் ஒரு பகுதியாகத்தான் மாணவர்களுக்கு இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் யோகா ஆகியவை கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வடமேற்கு சவுதி அரேபியாவின் தபுக் மாகாணத்தில் நீயோம் (Neom) என்ற ஸ்மார்ட் நகரத்தை தற்போது சவுதி அரசு கட்டமைத்து வருகிறது. சுமார் 10 ஆயிரத்து 200 சதுர மீட்டர் அளவில் இந்த ஸ்மார்ட் நகரம் உருவாகி வருகிறது. சுமார் 500 பில்லியன் டாலர் செலவில் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த நகர அமைப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நகரத்தின் முக்கிய குறிக்கோள் மாசு இல்லாத நகரம் என்பதே.   




இந்த நீயோம் நகரில் தண்ணீர் வீணாகாமல் இருக்க இணைய வழியில் தண்ணீர் வழங்கும் சேவை அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு வசிப்பவர்கள் வெறும் 20 நிமிடத்தில் அந்நகரத்திற்குள் எங்குவேண்டுமாலும் செல்லும் அளவிற்கு அதிவேக போக்குவரத்திற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.