Woman of color wins best director at Oscar | 'Nomadland' படத்துக்காக ஆஸ்கர் வென்றார் நிறத்தால் ஒடுக்கப்பட்ட பெண் இயக்குநர்..

சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளர்களை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

93வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் நோமேட்லேண்ட் திரைப்படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் அமெரிக்காவின் க்ளோயி சாவ் (Chloé Zhao). இதன் மூலம் இந்த விருதைப் பெறும் நிறத்தால் ஒடுக்கப்பட்ட முதல் பெண் இயக்குநர் என்கிற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருக்கிறார். மேலும் இந்த விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 39 வயதான க்ளோ சீனாவில் பிறந்தவர். ’தி ரைடர்ஸ்’, ’தி எட்டெர்னல்’, ’சாங்ஸ் மை பிரதர்ஸ் தாட் மீ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய க்ளோ ‘மக்கள் பிறக்கும்போது நல்லவர்களாகவே பிறக்கிறார்கள்’ என்கிற சீனப் பழமொழியை அடிக்கோடிட்டு உரையாற்றினார்.   

Continues below advertisement

 

Also Read: நான் இந்த உடலில் இப்போது முழுமையானவனாக உணர்கிறேன்!” – திருநம்பி எலியட் பேஜ்!

Continues below advertisement
Sponsored Links by Taboola