புனித ரமலான் ( ரம்ஜான் )  2025 நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள கோடி கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு, பிரார்த்தனை செய்வதற்கான நாளை எதிர்பார்த்து வருகின்றனர். இருப்பினும், ரமலானின் சரியான தொடக்கத் நாளானது,  நிலவின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடும். இந்நிலையில், ரமலான் எப்போது தொடங்கும் என்றும், இந்தியாவில் எப்போது தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் பார்ப்போம்.


சந்திர நாட்காட்டி:


இஸ்லாமிய நாட்காட்டியானது, நிலவை அடிப்படையாக கொண்டு இருப்பதால், நிலவின் ஆரம்பம் பிறை நிலவைப் பொறுத்து , ரமலானின் நோன்பானது தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால், இடத்திற்கு இடம் நிலவின் பிறை தெரிவது , வேறுபடும் என்பதால் ,ரமலானின் நோன்பானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. 


இஸ்லாமிய நாட்காட்டி சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமும் புதிய பிறை நிலவின் பார்வையைப் பொறுத்தது. ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான, ஷபான் ஜனவரி 31, 2025 அன்று பல நாடுகளில் தொடங்கியது.


Also Read: நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?


எப்போது பிறை தெரியும்:


பாரம்பரியமாக, ஷபானின் 29 வது நாளில் பிறை காணப்பட்டால், ரமலான் மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு, பிப்ரவரி 28, 2025 அன்று சந்திரன் தெரியும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர், இது மார்ச் 1, 2025 இல் முதல் விரதத்தை தொடங்கும் நிலை ஏற்படும். இருப்பினும், பிப்ரவரி 28 அன்று சந்திரன் தெரியவில்லை என்றால், ஷபான் ஒரு நாள் நீட்டிக்கப்படும், இது ரமலானின் தொடக்கத்தை மார்ச் 2, 2025 க்கு கொண்டு செல்லும். 
சில இஸ்லாமிய அறிஞர்கள் சில பிராந்தியங்களில் குறைந்த தெரிவுநிலை காரணமாக, உள்ளூர் அவதானிப்புகளின் அடிப்படையில் சரியான தேதி மாறுபடலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.


இந்தியாவில் எப்போது?


இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளுக்கு, மார்ச் 1, 2025 அன்று நிலவின் பிறை தெரியும் என கண்காணிப்பு குழுக்கள் கணித்துள்ளன. இதனால் பிறை பார்த்தால், மார்ச் 2 ஆம் தேதி ரம்ஜான் தொடங்கும். இல்லையெனில், முதல் ரோஜா மாதம் மார்ச் 3, 2025 அன்று பிறை தெரியும்.


Also Read: Gold Visa: கோல்டன் விசாவை அறிவித்த டிரம்ப்.! அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறலாம்..ஆனாலும் ட்விஸ்ட்


அமைதி


ரம்ஜான் 2025 நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள்,  உண்ணாவிரதத்தைத் தொடங்க அதிகாரப்பூர்வ நாளுக்காக காத்திருக்கின்றனர். சில பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம். சந்திரனின் பார்வையைப் பொறுத்து மார்ச் 2 அல்லது 3 ஆம் தேதிகூட சில இடங்களில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.


ரமலானின் சாராம்சம்சானது பக்தி, சுய ஒழுக்கம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த புனித மாதம் இதை கடைபிடிக்கும் அனைவருக்கும் அமைதியையும், ஆசீர்வாதத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும் தரும் என்று நம்பிக்கையை கொண்டுள்ளனர் இஸ்லாமியர்கள்.