நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?

Planet Parade 2025: நாளை இரவு , சூரிய குடும்பத்தின் 7 கோள்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு என்பதால், வானியல் அற்புதத்தை காண தவறாதீர்கள். எப்படி பார்ப்பது? எங்கே பார்ப்பது? 

Continues below advertisement

நமது சூரிய குடும்பத்தில் உள்ள  7 கோள்களும், ஒரே நேர்கோட்டில் வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், எப்போது பார்ப்பது, எந்த கோள்களை வெறும் கண்ணால் பார்க்கலாம், எந்த கோள்களை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என்பது குறித்து பார்போம். 

Continues below advertisement

சூரிய குடும்பம்:

நாம் வாழும் சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இந்நிலையில் , பூமியிலிருந்து 7 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்வை, நாளை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. சூரியன் மறைவை தொடர்ந்து, விண்ணில்  கோள்கள் தெரிய ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. 

Also Read: Gold Visa: கோல்டன் விசாவை அறிவித்த டிரம்ப்.! அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறலாம்..ஆனாலும் ட்விஸ்ட்

  • எப்போது பார்க்கலாம்

இருள் சூழ்ந்த நேரத்தில், திறந்த பகுதி, மலை உச்சி செல்வதன் மூலம் ஒளி மாசுபாட்டைத் தவிர்த்து, எளிமையாக் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.வானிலை முன்னறிவிப்பை பார்த்துக் கொள்ளுங்கள், மேகங்கள் இல்லாத தெளிவான வானம் முக்கியமானது. மலை உச்சி மாதிரியான இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், மொட்டை மாடியிலும், சுற்றி ஏதும் கட்டடங்கள் இல்லாத இடங்களிலும் இருந்து பார்க்கலாம்.

  • வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?

 புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகியவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கி உதவியுடன் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. 

Also Read: கல்லுக்குள் ஈரம்.! ஹமாஸ் இயக்கத்தினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணயக்கைதி.! வீடியோ..

  • வானத்தில் கோள்களை எங்கே பார்ப்பது 

வியாழன் & யுரேனஸ் - தென்கிழக்கு நோக்கிப் பாருங்கள்.

செவ்வாய் - கிழக்கு வானத்தில் தெரியும்.

வீனஸ், நெப்டியூன் & சனி - மேற்கு வானத்தில் பார்க்கலாம்.

புதன் - சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அடிவானத்திற்கு அருகில் காணலாம்.

Also Read: Sunita Williams: பூமிக்கு வந்தால் பென்சிலை தூக்குவதே கஷ்டம்..சுனிதா வில்லியஸ் எப்போது பூமி வருகிறார்? சிக்கல்கள் என்ன?

அடுத்து 2040


இந்த ஏழு கிரகங்களின் சீரமைப்பு 15 ஆண்டுகளுக்கு நிகழாது என்று தகவல் தெரிவிக்கின்றன. எக்லிப்டிக் எனப்படும் நீள்வட்டப்பாதையில், அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதால் ஏழு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரிவது அரிதான நிகழ்வாகும். 

ஆகையால், நாளை  தொலைநோக்கிகளுடன் வானியலில்ன் அற்புத நிகழ்ச்சியை காண தயாராகுங்கள், அல்லது அருகில் கோளரங்கள் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த இடங்களில் சென்று கண்டு களியுங்கள். இதேபோன்ற கிரக அணிவகுப்பைப் பார்ப்பதற்கான அடுத்த வாய்ப்பு 2040 வரை காத்திருக்க வேண்டும். ஆகையால், இந்த அரிய வானியல் காட்சியைத் காண தவறவிடாதீர்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola