Queen Elizabeth News : ராணி எலிசெபத்தை காண ஸ்காட்லாந்து விரைந்த இளவரசர்! எப்படி இருக்கு உடல்நிலை?
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்துள்ளவரான ராணி எலிசெபத் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி உடல்நலப் பிரச்சினைகளால் தளர்ச்சியடைந்தார்.

96 வயதான இங்கிலாந்து ராணியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக பக்கிங்ஹாம் மருத்துவமனை அறிவித்துள்ளது.
தற்போது எலிசெபத் ராணி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் உள்ள இல்லத்தில் இருக்கும் நிலையில், அவரைப் பார்க்க முன்னதாக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்துள்ளவரான ராணி எலிசெபத் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி உடல்நலப் பிரச்சினைகளால் தளர்ச்சியடைந்தார். மேலும் அவர் நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டு வந்தார்.
நேற்று (செப்.07) அவர் தனது மூத்த அரசியல் ஆலோசகர்களை ஸ்காட்லாந்தில் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் பாதியிலேயே வெளியேறி ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
மேலும் நேற்று முன் தினம் அவர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரெஸ்ஸாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.