இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை நன்றாக ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பிரைவி கவுன்சில் எனப்படும் மூத்த அரசாங்க ஆலோசகர்களுடனான கூட்டத்தை ராணி எலிசெபத் ஒத்திவைத்துள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக, ஸ்காட்லாந்து நாட்டில் தற்போது ஓய்வு எடுத்து வரும் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று நேரில் சந்தித்தார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுபவர்கள் இங்கிலாந்து மகாராணியைச் சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த நடைமுறைகளில் சற்று பரபரப்பாக இருந்ததால் ராணி எலிசெபத்திற்கு ஓய்வு இல்லை என்று கூறப்படுகிறது.


ராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும் அவர் தற்போதும் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் அரண்மனையிலே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபகாலமாக ராணி எலிசெபத் தன்னுடைய அரச கடமைகளை பெரும்பாலும் தனது வாரிசுகளிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த மன்னர் பிலிப்பின் மனைவியான ராணி எலிசெபத் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி லண்டனில் பிறந்தவர்.