இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இன்று அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் இங்கிலாந்து நாட்டு மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.





பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் 16 கடந்த 1643ம் ஆண்டு முதல் செப்டம்பர் 1-ந் தேதி 1715ம் ஆண்டு வரை 72 ஆண்டுகள் வரை ஆட்சிபுரிந்த பெருமைக்கு சொந்தக்காரர், அவருக்கு அடுத்தபடி மகாராணி எலிசபெத் நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.




நன்றி பிடிஐ


மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பால்மோரல் அரண்மைக்கு விரைந்துள்ளனர். ராணி மறைந்த காரணத்தால் இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்க உள்ளார். உயிரிழந்த மகாராணி எலிசபெத் உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவரது இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி ஆகும்.


விக்டோிய மகாராணி 63 ஆண்டுகள் ராணியாக அலங்கரித்த ராணி மகுடத்தை, ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் அலங்கரித்துள்ளார். அவர் கடந்த 1947ம் ஆண்டு மறைந்த மன்னர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் தற்போதைய இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் வரை சுமார் 15 இங்கிலாந்து பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார்.




நன்றி பிடிஐ


96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அறியப்பட்டாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக எலிசபெத் முடிசூடிக்கொண்டார். மன்னர் பிலிப்பிற்கும் – மகாராணி எலிசபெத்திற்கும் நான்கு வாரிசுகள் உள்ளனர். இளவரசர் சார்லஸ், இளவரிச ஆன்னா. இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் உள்ளனர்.






இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அரசு மரபுப்படி நேற்று ஸ்காட்லாந்து நாட்டில் மகாராணி எலிசபெத்தை நேரில் சந்தித்தார். வயது மூப்பு காரணமாக சமீபகாலமாகவே அரச கடமைகளை தனது குடும்பத்தினரிடம் பெரும்பாலும் ராணி ஒப்படைத்திருந்தார். மகாராணி எலிசபெத் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


மகாராணி எலிசபெத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச்சடங்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.