குவாட்ரான்டிட் விண்கல் மழை, ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை இதுவாகும். நேற்று இரவு இது உச்சம் அடைந்த இந்த விண்கல் மழை இன்றும் உச்சத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழும்.  இது மிகவும் பிரமிக்க வைக்கும் விண்கல் மழையாக கருதப்படுகிறது.


இந்த ஆண்டு, குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை நேற்று மாலை 6.53 மணிக்கு உச்சம் அடைய தொடங்கியது. வடக்கு பகுதியில் நிலவும் குளிர்காலத்தின் போது இந்த விண்கல் மழை தொடங்கிய நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


குவாட்ரான்டி விண்கல் மழை இந்த ஆண்டு ஒரு அதிசய வானியல் நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில் விண்கற்களுடன் சேர்ந்து, அரை நிலவு (half moon) என்று அழைக்கப்படும் ஒரு பிரகாசமான, மூன்றாம் காலாண்டு நிலவு, இரவில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சற்று மங்களான விண்கற்கள் நிலவின் ஒளியில் மறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரகாசமான குவாட்ரான்டிட் விண்கற்கள் firefall என்று அழைக்கப்படுகின்றன.


இவை ஒளி மற்றும் வண்ணத்தின் பெரிய வெடிப்புகள் ஆகும், அவை சராசரியான விண்கற்களை விட நீண்ட காலம் விண்வெளியில் இருக்கும்.    எஞ்சியிருக்கும் வால்மீன் துகள்கள் அல்லது உடைந்த சிறுகோள்களில் இருந்து விண்கற்கள் உருவாகின்றன. இந்த எஞ்சியிருக்கும் வால்மீன் துகள்கள் மற்றும் உடைந்த சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வரும். இந்த பொருட்கள் சூரிய மண்டலத்திற்கு அருகில் வரும்போது, ​​அவற்றால் உமிழப்படும் தூசி, அவற்றின் சுற்றுப்பாதையைச் சுற்றி அதன் பாதையில் பரவுகிறது. பூமி ஒவ்வொரு ஆண்டும் இந்த குப்பைகள் நிறைந்த பாதையை கடந்து செல்கிறது, அந்த நேரத்தில், வால்மீன் துகள்கள் மற்றும் உடைந்த சிறுகோள்களிலிருந்து வரும் குப்பைகள் கிரகத்தின் வளிமண்டலத்தில் மோதுகின்றன. அப்படி மோதும் போது,  வானத்தில் பிரகாசமான, வண்ணமயமான கோடுகள் தோன்றுகிறது.


ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200 குவாட்ரான்டிட் விண்கற்களை பார்க்க முடியும். சில பகுதிகளில், உச்சத்தின் போது, ​​ஒரு மணி நேரத்திற்கு 110 விண்கற்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 60 விண்கற்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 20-25 விண்கற்கள் வரை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் தென்படும். அவை வினாடிக்கு சுமார் 41 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.


ஜனவரி 16 ஆம் தேதி வரை  இந்த விண்கல் மழை இருக்கும் நிலையில் நேற்றும் இன்றும் இது உச்சத்தில் இருக்கும். ஜனவரி 11 ஆம் தேதிக்கு மேல், நிலவு மறையும் போது இந்த விண்கல் மழை மேலும் பிரகாசமாக காணலாம்.  குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை மற்ற விண்கல் மழைகளிலிருந்து வேறுபடும், ஏனெனில் இது உச்சம் அடையும் போது சில மணிநேரங்களுக்கு மட்டுமே fireballs தெரியும். பெர்சீட்ஸ், ஜெமினிட்ஸ் மற்றும் உர்சிட்ஸ் போன்ற பிற விண்கல் மழையின் போது fireball சுமார் இரண்டு நாட்களுக்கு இருக்கும்.


குவாட்ரான்டிட்களின் உச்சம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிப்பதற்கான காரணம் பற்றி நாசா விளக்கம் அளித்துள்ளது. இந்த விண்கல் மழை ஒரு மெல்லிய துகள்களை உள்ளடக்கியது.  மேலும், பூமி செங்குத்தாக கடப்பதால் இது சில மணி நேரங்கள் மட்டுமே தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது. குவாட்ரான்டிட்ஸ் மற்றும் பிற விண்கல் பொழிவுகளுக்கு இடையிலான மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், குவாட்ரான்டிட்ஸ் விண்கல் ஒரு சிறுகோளில் இருந்து உருவாகும், ஆனால் மற்ற விண்கற்கள் வால்மீன்களிலிருந்து உருவாகும்.