Cancer Vaccine: புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளனர் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.


வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான்.  சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது.  


”விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி"


இதனால், உலகம் முழுவதும் அரசு மற்றும் அரசு சாரா பல அமைப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எதிர்கால தொழில்நுட்பம் குறித்து அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ”புற்றுநோய்க்கான தடுப்பூசி விரையில் நோயாளிகளுக்கு கிடைக்கும். புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறுதி கட்டத்தில் உள்ளனர். விரைவில் சிகிச்சைக்காக பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.  இந்த தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்க்கு என்பதையும், நோயாளிகளுக்கு எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் அதிபர் புதின் குறிப்பிடவில்லை. 


தற்போதைய நிலவரப்படி, தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கர்பப்பை வாய் புறுநோய் மட்டுமே. செர்வாவாக் எனப்படும் நாட்டின் முதல் HPV தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செர்வாவாக் (Cervavac)  என்பது இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும்.


WHO சொன்னது என்ன?


9 முதல் 26 வயதுடைய பெண்கள்  இந்த செர்வாவாக்  தடுப்பூசியை பயன்படுத்தலாம். மேலும், கார்டசில் (Gardasil)  என்ற தடுப்பூசி பெரும்பாலான புற்றுநோய்க்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த தடுப்பூசியை 9 முதல் 45 வயதுடைய ஆண்டுகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.   இந்த கார்டசில்  தடுப்பூசியை கர்பப்பை வாய் புற்றுநோய்க்கும் பயன்படுத்தலாம். 


2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 35 மில்லியன் பேர் புற்றுநோயால்  பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்திருந்தது. புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை புற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.




மேலும் படிக்க


Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு